search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muslim community"

    இஸ்லாமியர்கள் நமக்கு வாக்களிக்கவில்லை என்பதால் அவர்களுக்காக எந்த வேலையும் செய்யாதீர்கள் என கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GowdaPatil #BJP
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து புதிதாக 25 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர்.

    இந்தநிலையில் பிஜாப்பூர் பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஓன்றில் பங்கேற்று பேசிய அந்த தொகுதியின் எம்.எல்.ஏ  பசன்கவுடா பாட்டீல் பேசியதாவது:

    பா.ஜ.க. கவுன்சிலர்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இஸ்லாமியர்கள் யாரும் பா.ஜ.க.விற்கு வாக்களிக்கவில்லை.

    எனவே இந்துக்களுக்கு மட்டுமே உதவ வேண்டும். மேலும் தனது அலுவலகத்திற்கு தொப்பி மற்றும் புர்காவுடன் யாரும் வரக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

    கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கர்நாடக மாநில முதல் மந்திரியாக குமாரசாமி நாளை பதவியேற்கவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவருக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. #KarnatakaDeputyCM
    பெங்களூரு:

    மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி நாளை கர்நாடக மாநில முதல் மந்திரியாக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறாத மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்களும், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர்.



    முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் நாளை புதிதாக அமையும் மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம். இதுதவிர சில முக்கிய துறைகளுக்கான மந்திரி பதவியும் தங்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் என கர்நாடக மாநில காங்கிரசார் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவருக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று எழும்பியுள்ளது.

    இதுதொடர்பாக, கர்நாடக மாநில முஸ்லிம்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினராக 7 முறை பதவி வகித்துள்ள சிவாஜிநகர் எம்.எல்.ஏ. ரோஷன் பேக் என்பவரை துணை முதல் மந்திரியாக நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தங்களது கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மூத்த காங்கிரஸ் முஸ்லிம் தலைவரும், கர்நாடக சட்ட மேல்சபை உறுப்பினருமான ஒருவர் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு முஸ்லிம்கள் பாரபட்சமின்றி அளித்த வாக்குகள்தான் காரணம். எனவே, சிவாஜிநகர் எம்.எல்.ஏ. ரோஷன் பேக் அல்லது முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவருக்கு துணை முதல் மந்திரி பதவியை கட்சியின் தலைமை அளிக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்களான நாங்கள் நிறைய தியாகங்களை செய்திருக்கிறோம். அதனால், எங்களை சேர்ந்தவர் முதல் மந்திரியாக வேண்டும் என்று இப்போது வலியுறுத்துகிறோம். எங்களது பங்களிப்பையும், ஆதரவையும் அங்கீகரிக்க தவறினால் காங்கிரசுக்கு முஸ்லிம் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaDeputyCM
    ×