லீடர் டைட்டில் வெளியீடு... புது வீடியோ வெளியிட்ட லெஜண்ட் சரவணன்

வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
லீடர் டைட்டில் வெளியீடு... புது வீடியோ வெளியிட்ட லெஜண்ட் சரவணன்
Published on

லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்திற்கு லீடர் என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், டைட்டில் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீட்டு நிகழ்வின் தருணங்களை பிரதிபலிக்கும் வீடியோ ஒன்றை லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் "லீடர்" டைட்டில் மற்றும் க்ளிம்ப்ஸ் வெளியீட்டு நிகழ்விற்கு லெஜண்ட் சரவணன் வருகை மற்றும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார். ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com