search icon
என் மலர்tooltip icon

    பைக்

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டெலிவரி - டிவிஎஸ் உடன் கூட்டணி வைத்த அமேசான் இந்தியா
    X

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டெலிவரி - டிவிஎஸ் உடன் கூட்டணி வைத்த அமேசான் இந்தியா

    • அமேசான் நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
    • கூட்டணியின் அங்கமாக ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அமேசான் தனது டெலிவரி பணிகளுக்காக பயன்படுத்த இருக்கிறது.

    அமேசான் இந்தியா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் இடையே புது கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தத்தின் படி அமேசான் இந்தியா நிறுவனம் டிவிஎஸ் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி பணிகளில் பயன்படுத்த இருக்கிறது.

    இந்திய சாலைகளில் 2025 வாக்கில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ஒப்பந்தம் மூலம் திட்டத்தை செயல்படுத்த அமேசான் முடிவு செய்துள்ளது. எனினும், டெலிவரிக்கு பயன்படுத்தப்பட இருக்கும் ஐகியூப் மாடல்களின் சரியான வேரியண்ட் எது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    டெலிவரி பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதால் அமேசான் நிறுவனம் எண்ட்ரி லெவல் ஐகியூப் மாடலை வாங்கலாம் என கூறப்படுகிறது. டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஸ்கூட்டரில் உள்ள எல்லா வசதிகளும் பயன்தராது. எனினும், இவ்வாறு செய்யும் போது ரேன்ஜ் மற்றும் சார்ஜிங் நேரம் உள்ளிட்டவை கவலை அளிக்கும் பிரச்சினையாக இருக்கும்.

    இதனை எதிர்கொள்ள டிவிஎஸ் நிறுவனம் அமேசானுக்காக அதிக ரேன்ஜ் மற்றும் செயல்திறன் வழங்கும் ஐகியூப் வேரியண்டை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தம் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மேலும் அதிகரிக்க செய்யும் என்றே தெரிகிறது.

    Next Story
    ×