என் மலர்
ஆட்டோமொபைல்
- நடப்பாண்டு வாகனங்களின் பதிவு 21.10 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
- ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வாகும்.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவம் பதிவான வாகனங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 இருசக்கர வாகனங்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 517 ஆட்டோக்கள், 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், 73 ஆயிரத்து 577 டிராக்டர்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 841 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் உள்பட 40 லட்சத்து 23 ஆயிரத்து 923 வாகனங்கள் பதிவாகியுள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாதம் 18 லட்சத்து 27 ஆயிரத்து 337 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 120.21 சதவீதம் அளவுக்கு வாகனங்கள் அதிகம் பதிவாகியிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 735 ஆக இருந்த இருச்சக்கர வாகனங்களின் பதிவு, அக்டோபர் மாதம் 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 ஆக எழுச்சியடைந்துள்ளது. இது 144.60 சதவீதம் உயர்வு ஆகும்.
இதேபோல 2 லட்சத்து 99 ஆயிரத்து 369 ஆக இருந்த தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள் 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 ஆகவும், 72 ஆயிரத்து 124 ஆக இருந்த வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 841 ஆகவும் ஏறுமுகம் கண்டிருக்கிறது. பண்டிகை கால 42 நாட்களில், அதாவது செப்டம்பர் மாதம் 22-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை மட்டும் 52 லட்சத்து 38 ஆயிரத்து 401 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டு 43 லட்சத்து 25 ஆயிரத்து 632 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு வாகனங்களின் பதிவு 21.10 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு, தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்ததால் வாகனங்களின் விற்பனை சூடுபிடித்தது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறும்போது, "ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் வரி குறைப்பு, பண்டிகை காலம் மற்றும் கிராமப்புற மக்களிடம் மறுமலர்ச்சி ஆகியவை ஒரே நேரத்தில் வந்ததால் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் அக்டோபர் மாதம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வாகும்.
வரவிருக்கும் வாகனங்களின் புதிய மாடல்கள், ஆரோக்கியமான நிதி நிலைமை, நிலையான எரிபொருள் விலை ஆகியவை தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கின்றன" என்றார்.
- டுகாட்டி ரேஸ் ரைடிங் மோட், குயிக்-ஷிஃப்டர் மேப் மற்றும் டைரக்ட் திராட்டில் ஆகியவற்றைச் சேர்த்துள்ளது.
- பைக்கில் கார்பன்-ஃபைபர் டிரிம் மற்றும் அக்ரபோவிக் டைட்டானியம் சைலன்சர் பொருத்தப்பட்டுள்ளன.
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா V4 பைக்ஸ் பீக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டுகாட்டி பைக்கின் விலை ரூ. 36,16,700 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் டெலிவரி உடனடியாகத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மல்டிஸ்ட்ராடா பிரிவில் அதிக கவனம் செலுத்தும், ரோடு-ஸ்போர்ட் மாடல் ஆகும்.
இந்த பைக்கில் 168bhp பவர் மற்றும் 123.8Nm டார்க் வெளிப்படுத்தும் 1,158 சிசி V4 Granturismo என்ஜின் உள்ளது. இது Euro 5+ விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டுகாட்டி ரேஸ் ரைடிங் மோட், குயிக்-ஷிஃப்டர் மேப் மற்றும் டைரக்ட் திராட்டில் ஆகியவற்றைச் சேர்த்துள்ளது.
இந்த பைக்கில் உள்ள 6-ஆக்சிஸ் IMU உடன், டுகாட்டி வெஹிகில் அப்சர்வர் (DVO) டிராக்ஷன், வீலி, ஸ்லைடு, கார்னரிங் ABS மற்றும் ரேஸ்-டியூன் செய்யப்பட்ட கம்பைன்டு பிரேக்கிங் ஆகியவற்றை மேம்படுத்த நூற்றுக்கணக்கான உள்ளீடுகளை டிராக் செய்கிறது. ரேடார் தொகுப்பு அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் புதிய ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது.
இத்துடன் தெளிவான யுஐ உடன் 6.5-இன்ச் TFT சஸ்பென்ஷன் மோட்களை அமைக்கவும், ரேஸ், ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் வெட் ஆகியவற்றில் இருந்து தேர்வு செய்யவும் உங்களை அனுமதிக்கிறது.
மேலும் பைக்கில் கார்பன்-ஃபைபர் டிரிம் மற்றும் அக்ரபோவிக் டைட்டானியம் சைலன்சர் பொருத்தப்பட்டுள்ளன. டுகாட்டி கார்னரிங் லைட்கள், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ இக்னிஷன், குயிக் ஷிஃப்டர் அப்/டவுன், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டுகாட்டி பவர் லாஞ்ச் மற்றும் டேட்டா லாக்கிங் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு ADV இன் நிலைப்பாட்டைக் கொண்ட ரோடு-ஃபர்ஸ்ட் ஸ்போர்ட் டூரர் மாடலை விரும்பும் ரைடர்களை இலக்காகக் கொண்ட ஒரு ஃபுல் கிட் பட்டியல் ஆகும்.
- 1983 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கியது.
- இந்த மைல்கல்லை அடைய மாருதி சுசுகி நிறுவனத்திற்கு 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசுகி படைத்துள்ளது.
1983 ஆம் ஆண்டு இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கிய மாருதி சுசுகி இந்த மைல்கல்லை அடைய 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.
விற்பனையான 3 கோடி கார்களில் அதிகபட்சமாக Alto மாடல் 47 லட்சம், Wagon R மாடல் 34 லட்சம், Swift மாடல் 32 லட்சம் விற்றுள்ளதாக மாருதி சுசுகி கூறியுள்ளது.
இதுகுறித்து பேசிய மாருதியின் தலைமை நிர்வாக அதிகாரி, "இந்தியாவில் 1,000 பேருக்கு 33 கார்கள் மட்டுமே உள்ளது. ஆகையால் எங்களுக்கு இன்னும் அதிகமான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளது" என்று தெரிவித்தார்.
- ADAS சூட், பிளாக் நிற அலாய் வீல்கள், புதுமையான கிராபிக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
- புதிய Fronx மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் நடைபெற்று வரும் மோட்டார் வாகன கண்காட்சியில், Fronx Flex Fuel கான்சப்ட் காரை சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கக்கூடியது.
இந்தியச் சந்தையில் உள்ள Fronx காரில் 1.2 லிட்டர் என்ஜின் K சீரிஸ் டூயல் ஜெட் என்ஜின் உள்ளது. 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்டிலும் கிடைக்கிறது. ஆனால், ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Fronx காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது.
இந்த யூனிட் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளும் வசசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ADAS சூட், பிளாக் நிற அலாய் வீல்கள், புதுமையான கிராபிக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
புதிய Fronx மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை விரைவில் 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், 85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தக்கூடிய காரை சுசூகி நிறுவனம் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- புதிய பனிகேல் V2 மாடலில் 890சிசி என்ஜின் இடம் பெற்றுள்ளது.
- 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
டுகாட்டி நிறுவனம், பனிகேல் V2 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் முதன் முதலாக கடந்த ஆண்டு நடந்த மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பனிகேல் V2 மாடலில் 890சிசி என்ஜின் இடம் பெற்றுள்ளது. இந்த யூனிட் அதிகபட்சமாக 10,750 120hp பவரையும், 93.3 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் முன்புறம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறம் கயாபா மோனோ ஷாக்-அப்சர்வர்கள், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ், 5-இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பனிகேல் V2 மாடலின் தொடக்க விலை ரூ.19.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் இதன் டாப் வேரியண்ட் விலை ரூ.21.1 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- ஹூண்டாய் Grand i10 Nios மாடல் ரூ.5.47 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
- ஹூண்டாய் i20 நைட் எடிஷன் மாடல் ரூ.9.15 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் நிறைய பட்ஜெட் கார்களை அறிமுகம் செய்துள்ளது.
அவ்வகையில், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களின் பட்டியல்:
1. ஹூண்டாய் i20 - ரூ.6.80 லட்சம்
2. ஹூண்டாய் Aura - ரூ.5.98 லட்சம்
3. ஹூண்டாய் Exter - ரூ.5.68 லட்சம்
4. ஹூண்டாய் Grand i10 Nios - ரூ.5.47 லட்சம்
5. ஹூண்டாய் i20 N-Line - ரூ.9.15 லட்சம்
6. ஹூண்டாய் Venue - ரூ.7.90 லட்சம்
- இந்த மாடலில் 648 சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
- இந்த யூனிட் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புல்லட் 650' பைக்கை இத்தாலியில் நடைபெற்று வரும் 2025 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
வரும் மாதங்களில் புல்லட் 650 பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது.
இந்த மாடலில் 648 சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த யூனிட் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இந்த பைக்கின் விலை சுமார் ரூ.3.4 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- எலிவேட் ADV மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல வசதிகள் உள்ளன.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் எலிவேட் மாடலின் புதிய டாப் எண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. எலிவேட் ADV என்று அழைக்கப்படும் புதிய வேரியண்ட் ஸ்போர்ட் தோற்றத்தையும், தனித்துவமான காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய எலிவேட் மாடலின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விலை ரூ. 15.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இதன் CVT டூயல்-டோன் மாடன் விலை ரூ. 16.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ADV மாடல் கிளாஸ் பிளாக் ஆல்பா-போல்ட் பிளஸ் முன்பக்க கிரில், ஆரஞ்சு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஹூட் டெக்கல், ORVMகள் மற்றும் ஆரஞ்சு சிறப்பம்சங்களுடன் பிளாக் அலாய் வீல்கள் என பிரத்யேக ஸ்டைலிங் அப்டேட்களுடன் வருகிறது. இத்துடன் ADV பேட்ஜ்கள், ஆரஞ்சு ஃபாக் லைட் மற்றும் ஆரஞ்சு நிற அக்சென்ட்களுடன் கூடிய பின்புற பம்பர் ஸ்கிட் பிளேட் வழங்கப்படுகின்றன.
எலிவேட் ADV மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பேடில் ஷிஃப்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களில், எலிவேட் ADV மாடலில் ஹோண்டா சென்சிங் ADAS பொருத்தப்பட்டுள்ளது. இதில் லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல வசதிகள் உள்ளன. நிலையான பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், லேன் வாட்ச் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ISOFIX மவுண்ட் ஆகியவை அடங்கும்.
எலிவேட் ADV மாடல், மீடியோராய்டு கிரே மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் நிறங்களில், சிங்கில் டோன் மற்றும் டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது.
- 2026 யமஹா R7 அடுத்த வாரம் நடைபெறும் EICMA நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது.
- MT போன்ற அதே மாற்றங்களுடன் தான் R7 அறிமுகம் செய்யப்பட உள்ளது.
யமஹா நிறுவனம் விரைவில் சர்வதேச சந்தைகளுக்கான 2026 R7 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. சுவிட்சர்லாந்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஹோமோலோகேஷன் ஆவணங்கள் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இது புதுப்பிக்கப்பட்ட என்ஜினுடன் ஒரு புதிய மாடல் இருப்பதைக் குறிப்பிடுகிறது.
சர்வதேச சந்தையில் யமஹா R7 மாடல் 2022ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்த பைக் கொண்டிருந்த அம்சங்கள், ஸ்டைலிங் மற்றும் பலவித காரணங்களுக்காக இது உடனடியாக பிரபலமடைந்தது. இருப்பினும், அதன் பின்னர் இந்த பைக் எந்த அப்டேட்டையும் பெறவில்லை.
இதே பைக்குடன் அறிமுகமான நேக்கட் பைக்கான MT-07, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பெரிய அப்டேட்டை பெற்றது. இப்போது, MT போன்ற அதே மாற்றங்களுடன் தான் R7 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய R7 சமீபத்திய யூரோ 5 பிளஸ் எமிஷன் விதிமுறைகளுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் புதிய MT-07 மாடலை போலவே, ஸ்போர்ட் பைக்கிலும் தேர்ந்தெடுக்கக்கூடிய ரைட் மோட்கள் மற்றும் மாறக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் கொண்ட எலெக்ட்ரிக் த்ராட்டில் வழங்கப்படலாம். செயல்திறனைப் பொறுத்தவரை, 73bhp பவர், 67Nm டார்க் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
2026 யமஹா R7 அடுத்த வாரம் நடைபெறும் EICMA நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது. அதன் இந்திய வெளியீட்டைப் பொறுத்தவரை, யமஹா தனது பெரிய பைக்குகளை நீண்ட காலமாக நம் நாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறது, ஆனால் அதற்கு மேல் எந்த மேம்பாடும் இல்லை.
- இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற சந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டது.
- பாதுகாப்பு உதவி பிரிவில், Fronx 21 புள்ளிகளில் 16.50 புள்ளிகளைப் பெற்றது.
சுசுகி நிறுவனத்தின் Fronx மாடல் பாதுகாப்பு சோதனையில் அசத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தால் (ASEAN NCAP) சுசுகி Fronx மாடல் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசிய சந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் Fronx, ஒட்டுமொத்தமாக 77.70 புள்ளிகளைப் பெற்றது.
மேலும் சந்தையைப் பொறுத்து, இந்த மாடல் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளின் (ADAS) ஆப்ஷனையும் பெறுகிறது. இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் Fronx மாடலில் தற்போது வரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக முதிய பயணிகளுக்கான பாதுகாப்பில், Fronx 32 புள்ளிகளுக்கு 29.37 புள்ளிகளைப் பெற்றது.
குழந்தை பயணிகளுக்கான பாதுகாப்பிற்கு (COP), Fronx 51 புள்ளிகளுக்கு 38.94 புள்ளிகளைப் பெற்றது. இதற்காக இந்த கார் 18 மாத (பின்புறம் எதிர்கொள்ளும்) மற்றும் மூன்று வயது (முன்னோக்கி எதிர்கொள்ளும்) டம்மிகளுடன் வாகனம் சோதிக்கப்பட்டது.
மோட்டார்சைக்கிள் ஓட்டுநரின் பாதுகாப்பை பொருத்தவரை, பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ஹெட்லைட் செயல்திறன் மற்றும் ரைடர் விசிபிலிட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய Fronx 16 புள்ளிகளுக்கு 8.00 புள்ளிகளைப் பெற்றது. சோதிக்கப்பட்ட மாறுபாடு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல் ஆகும். இது இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற சந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டது.

பாதுகாப்பு உதவி பிரிவில், Fronx 21 புள்ளிகளில் 16.50 புள்ளிகளைப் பெற்றது. அனைத்து வகைகளிலும் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), முன் மற்றும் பின் பயணிகளுக்கான சீட் பெல்ட் நினைவூட்டல்கள், குழந்தை இருக்கைகளுக்கான ISOFIX மவுண்ட்கள் மற்றும் பாதசாரி-பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
ஆட்டோனமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB), லேன் டிபார்ச்சர் வார்னிங் (LDW), லேன் கீப் அசிஸ்ட் (LKA), ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் (FCW), பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் (BSD) மற்றும் ஆட்டோ ஹை பீம் (AHB) போன்ற ADAS அம்சங்கள் சந்தையைப் பொறுத்து தரநிலையாகவோ அல்லது விருப்பமாகவோ வழங்கப்படுகின்றன.
- இரு மாடல்களில் பேஸ் வேரியண்ட் 199 கிலோ எடையும், V2 S வெர்ஷன் 202 கிலோ எடையும் கொண்டது.
- இரண்டும் எரிபொருள் இல்லாமல் அளவிடப்படுகின்றன.
டுகாட்டி இந்தியா நிறுவனம் புதிய 2025 மல்டிஸ்ட்ராடா V2 சீரிசை புதிய V2 என்ஜின் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது. புதிய மல்டிஸ்ட்ராடா மாடல் விலை ரூ. 18.88 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மிடில்வெயிட் அட்வென்ச்சர் மாடல், டுகாட்டியை வரையறுக்கும் ஸ்போர்ட்டி அம்சங்களில் சமரசம் செய்யாமல் ஆல்-ரோடு திறனில் ஆர்வமுள்ள ரைடர்களுக்கு சவுகரியத்தை வழங்குகிறது.
இந்த மோட்டார்சைக்கிள் மல்டிஸ்ட்ராடா V2 டுகாட்டி ரெட் நிறத்தில் (விலை ரூ. 18.88 லட்சம்), மற்றும் அதிக அம்சங்கள் நிறைந்த மல்டிஸ்ட்ராடா V2 S டுகாட்டி ரெட் மற்றும் ஸ்டார்ம் கிரீன் நிறத்தில் (விலை ரூ. 20.99 லட்சம் மற்றும் ரூ. 21.29 லட்சம்) என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. புதிய V2 மோட்டார் இந்தியாவின் E20 எரிபொருள் தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இரு மாடல்களில் பேஸ் வேரியண்ட் 199 கிலோ எடையும், V2 S வெர்ஷன் 202 கிலோ எடையும் கொண்டது. இரண்டும் எரிபொருள் இல்லாமல் அளவிடப்படுகின்றன. இது முந்தைய மாடலை விட 18 கிலோ குறைப்பைக் குறிக்கிறது. ஃபிரேம், சப்-ஃபிரேம் மற்றும் ஸ்விங்-ஆர்ம் ஆகியவை அலுமினியம் மற்றும் ஸ்டீல் கலவையைப் பயன்படுத்தி சமநிலையை மேம்படுத்த
புதிய பைக்கில் 890cc V2 டுவின் சிலிண்டர் என்ஜின் உள்ளது. இந்த யூனிட் 10,750rpm இல் 114bhp பவர் மற்றும் 8,250rpm இல் 92Nm டார்க் வழங்குகிறது. 54.9 கிலோ எடையுள்ள இந்த புதிய என்ஜின் பைக்கை சுறுசுறுப்பாக் வைத்துக் கொள்ள பங்களிக்கிறது. இது V2 S இல் டுகாட்டி குயிக் ஷிப்ட் 2.0 உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது.
- இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- இந்த கார் ஏழு இருக்கை அமைப்பிலும் கிடைக்கிறது.
கியா இந்தியா நிறுவனம், கேரன்ஸ் சீரிசில் CNG வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 11.77 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. டீலர் தரப்பில் ஃபிட்டிங் செய்து தரப்படும் கேரன்ஸ் CNG பிரீமியம் (O) வேரியண்டின் விலையை விட ரூ. 77,900 அதிகம் ஆகும். இதன் விலை ரூ. 10.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கேரன்ஸ் மாடலில் உள்ள CNG கிட் அரசு அனுமதி பெற்று லோவாடோ வழங்குகிறது. இது மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் மூன்றாம் தரப்பு உத்தரவாதத்துடன் வருகிறது. இதன் தொழில்நுட்ப அம்சங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் 113bhp பவர் மற்றும் 144Nm டார்க் வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் ஏழு இருக்கை அமைப்பிலும் கிடைக்கிறது.

அம்சங்களைப் பொறுத்தவரை, கியா கேரன்ஸ் CNG காரில் 8-இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, வழிகாட்டுதல்களுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 12.5-இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆறு ஏர்பேக்குகள், 5 டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், வீல் கவர்களுடன் கூடிய 15-இன்ச் ஸ்டீல் வீல்கள் மற்றும் TPMS போன்ற அம்சங்கள் உள்ளன.






