search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யமஹா"

    • புதிய மாடல் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    யமஹா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிள் RX100. இந்திய சந்தையில் அதிக பிரபலமாக விளங்கிய RX100 மோட்டார்சைக்கிள், புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில், யமஹா RX100 புதிய மாடல் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. லீக் ஆகி இருக்கும் புகைப்படத்தின் படி புதிய RX100 மோட்டர்சைக்கிளில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மொபைல் கனெக்டிவிட்டி, மொபைல் சார்ஜிங் வசதி, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

    புதிய RX100 மாடலில் 225சிசி பி.எஸ்.6 ஃபேஸ் 2 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20 ஹெச்.பி. பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய யமஹா RX100 விலை இந்தியாவில் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் முதல் துவங்கும் என்று தெரிகிறது.

    இந்த பைக்கின் செயல்திறன் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் இது விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், புதிய யமஹா RX100 அம்சங்கள் மற்றும் வெளியீடு தொடர்பாக சமீபத்தில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • இரு மிட் ரேன்ஜ் மாடல்களும் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்.
    • இரு மாடல்களிலும் 321சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் R3 மற்றும் MT 03 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இரு மிட் ரேன்ஜ் மாடல்களும் இந்திய சந்தையில், பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

    இரு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு யமஹா விற்பனையாளர்கள், அதிகாரப்பூர்வமற்ற முறையில் மேற்கொண்டு வருகின்றனர். யமஹா R3 மற்றும் MT 03 மாடல்கள் சமீபத்தில் நடைபெற்ற டீலர்களுக்கான நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இரு மாடல்களுடன் R7, MT 07 மற்றும் MT 09 மாடல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

     

    இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், புதிய மாடல்களின் புகைப்படங்களை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டனர். யமஹா R3 மாடல், கேடிஎம் RC390 மற்றும் கவாசகி நின்ஜா 300 மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் ஆகும். மேலும் MT 03 மாடல் கேடிஎம் 390 டியூக், பிஎம்டபிள்யூ G310R மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    இரு மாடல்களிலும் 321சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 40.4 ஹெச்பி பவர், 29.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் KYB அப்சைடு-டவுன் முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி லைட்டிங் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    பிரேக்கிங்கிற்கு இரு வீல்களிலும் முன்புறம் 298mm, பின்புறம் 220mm டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. புதிய யமஹா R3 விலை ரூ. 3.5 லட்சத்தில் துவங்கி, ரூ. 4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்டுகிறது. புதிய MT 03 மாடலின் விலை ரூ. 3 லட்சத்தில் துவங்கி ரூ. 3.7 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    • யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புது வியாபாரத்தை துவங்கி இருக்கிறது.
    • சிப் எனும் டெலிவரி நிறுவனத்தில் யமஹா முதலீடு செய்கிறது.

    யமஹா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை லீசுக்கு விடும் புது வியாபாரத்தை இந்தியாவில் துவங்கி உள்ளது. யமஹா நிறுவனத்தின் துணை பிராண்டு மோட்டோ பிஸ்னஸ் சர்வீஸ் இந்தியா மூலம் புதிய லீசிங் வியாபாரத்தை நடத்த யமஹா முடிவு செய்துள்ளது.

    இந்த வியாபாரத்திற்காக யமஹா நிறுவனம் சிப் எலெக்ட்ரிக் எனும் டெலிவரி சர்வீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது. லீசிங் வியாபாரத்தில் மோட்டோ பிஸ்னஸ் சர்வீஸ் இந்தியா நிறுவனம் முதற்கட்டமாக 250 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சிப் நிறுவனத்திற்கு வழங்கும். சிப் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தனது வியாபாரத்தில் பயன்படுத்த இருக்கிறது.

    தற்போது நாடு முழுக்க சுமார் 5 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை சிப் வைத்து இருக்கிறது. இந்திய சந்தையில் தனது வியாபாரத்தை நீட்டிக்க சிப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2024 வாக்கில் 1.5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருக்க சிப் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது.

    ×