என் மலர்
நீங்கள் தேடியது "yamaha"
- இந்த பைக்கில் டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் நிலையாக வழங்கப்படுகிறது.
- இந்த சேசிஸ், யமஹாவின் டெல்டாபாக்ஸ் ஃபிரேமில் இடம்பெற்றுள்ளது.
யமஹா நிறுவனம் முற்றிலும் புதிய FZ-Rave பைக்குடன் XSR155 மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய XSR155 மாடலின் விலை ரூ.1,49,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யமஹாவின் நவீன-ரெட்ரோ மாடல்கள் பிரிவில் மிகவும் சிறிய மாடலாக XSR155 இணைந்துள்ளது.
இந்த பைக் MT-15 மாடலுடன் கிளாசிக் தோற்றத்தை இணைத்தது போன்ற பிம்பம் கொண்டுள்ளது. இத்துடன் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், டியர் டிராப் டேன்க், எல்சிடி கன்சோல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய XSR155 பைக்கில் 155cc, லிக்விட்-கூல்டு, 4-வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 18.1bhp பவர், 14.2Nm டார்க் வெளிப்படுத்துகிறது. மேலும், இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் நிலையாக வழங்கப்படுகிறது.
இந்த சேசிஸ், யமஹாவின் டெல்டாபாக்ஸ் ஃபிரேமில் இடம்பெற்றுள்ளது. இத்துடன் அப்சைடு-டவுன் முன் ஃபோர்க்குகள் மற்றும் லின்க்டு-டைப் மோனோஷாக் கொண்டிருக்கிறது. புதிய பைக்கை யமஹா நிறுவனம் -மெட்டாலிக் கிரே, விவிட் ரெட், கிரேயிஷ் கிரீன் மெட்டாலிக் மற்றும் மெட்டாலிக் ப்ளூ என நான்கு நிறங்களில் வழங்குகிறது. மேலும், இத்துடன் இரண்டு பிரத்யேக அக்சஸரீ பேக்குகள் வழங்கப்படுகின்றன.
- இந்த பைக் 136 கிலோ எடை மற்றும் 17-இன்ச் சக்கரங்களை கொண்டிருக்கிறது.
- 13-லிட்டர் ஃபியூவல் டேன்க் வழங்கப்படுகிறது.
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 150சிசி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள புதிய பைக் FZ-RAVE என அழைக்கப்படுகிறது. இந்த பைக்கின் அறிமுக விலை ரூ.1,17,218 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைக் வழக்கமான FZ மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் பொசிஷன் லைட்டுடன் கூடிய ஃபுல்-எல்இடி ப்ரொஜெக்டர், நேர்த்தியான வென்ட்கள் கொண்ட ஃபியூவல் டேங்க் மற்றும் பின்புறத்தில் சிறிய எக்சாஸ்ட் ஆகியவை இடம்பெற்று இருக்கிறது.
இவை பைக்கிற்கு நேர்த்தியான தோற்றத்தை கொடுக்கிறது. பயணம் வசதியாகவும் நீண்ட மாலைப் பயணத்தில் கூட நிலையாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பைக்கில் சிங்கில்-பீஸ் இருக்கை மற்றும் ஒரு தெளிவான டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.
புதிய FZ-RAVE பைக்கிலும் யமஹாவின் நம்பகமான 149cc, ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 12.2bhp பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த பைக் 136 கிலோ எடை மற்றும் 17-இன்ச் சக்கரங்களை கொண்டிருக்கிறது. இதில் 13-லிட்டர் ஃபியூவல் டேன்க் வழங்கப்படுகிறது.
மேலும், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த பைக் மேட் டைட்டன் மற்றும் மெட்டாலிக் பிளாக் என இரண்டுவித நிறங்களில் கிடைக்கிறது.
- 2026 யமஹா R7 அடுத்த வாரம் நடைபெறும் EICMA நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது.
- MT போன்ற அதே மாற்றங்களுடன் தான் R7 அறிமுகம் செய்யப்பட உள்ளது.
யமஹா நிறுவனம் விரைவில் சர்வதேச சந்தைகளுக்கான 2026 R7 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. சுவிட்சர்லாந்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஹோமோலோகேஷன் ஆவணங்கள் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இது புதுப்பிக்கப்பட்ட என்ஜினுடன் ஒரு புதிய மாடல் இருப்பதைக் குறிப்பிடுகிறது.
சர்வதேச சந்தையில் யமஹா R7 மாடல் 2022ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்த பைக் கொண்டிருந்த அம்சங்கள், ஸ்டைலிங் மற்றும் பலவித காரணங்களுக்காக இது உடனடியாக பிரபலமடைந்தது. இருப்பினும், அதன் பின்னர் இந்த பைக் எந்த அப்டேட்டையும் பெறவில்லை.
இதே பைக்குடன் அறிமுகமான நேக்கட் பைக்கான MT-07, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பெரிய அப்டேட்டை பெற்றது. இப்போது, MT போன்ற அதே மாற்றங்களுடன் தான் R7 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய R7 சமீபத்திய யூரோ 5 பிளஸ் எமிஷன் விதிமுறைகளுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் புதிய MT-07 மாடலை போலவே, ஸ்போர்ட் பைக்கிலும் தேர்ந்தெடுக்கக்கூடிய ரைட் மோட்கள் மற்றும் மாறக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் கொண்ட எலெக்ட்ரிக் த்ராட்டில் வழங்கப்படலாம். செயல்திறனைப் பொறுத்தவரை, 73bhp பவர், 67Nm டார்க் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
2026 யமஹா R7 அடுத்த வாரம் நடைபெறும் EICMA நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது. அதன் இந்திய வெளியீட்டைப் பொறுத்தவரை, யமஹா தனது பெரிய பைக்குகளை நீண்ட காலமாக நம் நாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறது, ஆனால் அதற்கு மேல் எந்த மேம்பாடும் இல்லை.
- R15 மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ.17,581 குறைக்கப்பட்டு, ரூ.1,94,439 முதல் ரூ.2,12,020 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- MT15 விலை ரூ.14,964 குறைக்கப்பட்டு ரூ.1,65,536 என மாறியுள்ளது.
யமஹா மோட்டார் சைக்கிள்களின் விலை ஜி.எஸ்.டி. மாற்றத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி 2.0 மூலம் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்துக்கு பிறகு, R15 மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ.17,581 குறைக்கப்பட்டு, ரூ.1,94,439 முதல் ரூ.2,12,020 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. MT15 விலை ரூ.14,964 குறைக்கப்பட்டு ரூ.1,65,536 என மாறியுள்ளது.
இதுபோல் ஏரோக்ஸ் 155 விலை ரூ.12,753 குறைக்கப்பட்டு ரூ.1,41,137 ஆகவும், Ray ZR ரூ.7,759 குறைக்கப்பட்டு ரூ.86,001 ஆகவும், பேசினோ ரூ.8,509 குறைக்கப்பட்டு ரூ.94,281 ஆகவும் விலை மாறியுள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- 2025 ஆம் ஆண்டில் இந்த பைக்குகள் பெற்ற இரண்டாவது விலைக் குறைப்பு இதுவாகும்.
- கடந்த ஜனவரி மாதம், யமஹா அவற்றின் விலைகளை ரூ. 1.10 லட்சமாக குறைத்தது.
இந்தியாவில் சமீபத்தில் புதிய ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் மூலம், 350 சிசிக்கும் குறைவான மோட்டார்சைக்கிள்கள் மிக குறைந்த விலையில் விற்பனையாகின்றன. இந்த வகை பைக்குகளுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதன் விளைவாக பல இரு சக்கர வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இந்த பிரிவில் யமஹா நிறுவனத்தின் பிரபலமான பிரீமியம் மாடல்கள்- R3 மற்றும் MT-03 ஆகியவை உள்ளன.
இரண்டு பைக்குகளும் 350cc-க்கும் குறைவான எஞ்சின் மூலம் இயக்கப்படுவதால், அவற்றின் விலையில் சுமார் ரூ. 20,000 வரை சரிவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, R3 மாடல் ரூ. 3.39 லட்சமாகவும், அதன் நேக்கட் வெர்ஷன் MT-03 மாடல் ரூ. 3.30 லட்சமாகவும் (இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) மாறியுள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில், 2025 ஆம் ஆண்டில் இந்த பைக்குகள் பெற்ற இரண்டாவது விலைக் குறைப்பு இதுவாகும். கடந்த ஜனவரி மாதம், யமஹா அவற்றின் விலைகளை ரூ. 1.10 லட்சமாக குறைத்தது. இது 2023-இன் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட கணிசமாக அதிக அணுகக்கூடியதாக மாற்றியது.
இரு மாடல்களிலும் 321cc, இரட்டை சிலிண்டர் எஞ்சின் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட சேஸ் ஆகியவை அசத்தலான ரைடு அனுபவத்தை வழங்குகின்றன. இந்த பிரிவில் சில பைக்குகளை ஒப்பிட முடியாது.
- யமஹா Nmax 155 மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- யமஹா ஏற்கனவே ஏரோக்ஸ் 155 மற்றும் ஆர்15 ஆகியவற்றை இந்தியாவில் தயாரித்து வருகிறது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் நவம்பர் 11ஆம் தேதி புதிய வாகனம் வெளியிடுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி யமஹா நிறுவனம் தனது XSR 155 அல்லது Nmax 155 மாடலை நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யும் என்று நம்பலாம்.
இரண்டில் ஒன்று அல்லது இரண்டு மாடல்களையும் கூட யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம். XSR 155 மற்றும் Nmax 155 என இரண்டு மாடல்களும் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் மேக்ஸி-ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டதால், யமஹா Nmax 155 மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும், யமஹா ஏற்கனவே ஏரோக்ஸ் 155 மற்றும் ஆர்15 ஆகியவற்றை இந்தியாவில் தயாரித்து வருகிறது. எனவே, என்மேக்ஸ் 155 மற்றும் எக்ஸ்எஸ்ஆர் 155 ஆகியவற்றை இந்தியாவில் உள்ளூர்மயமாக்குவதற்கு அதிக செலவு ஏற்படாது. ஏனெனில் இவை ஏரோக்ஸ் மற்றும் ஆர்15 போன்ற அதே தளங்களை அடிப்படையாகக் கொண்டவை.
புதிய ஜிஎஸ்டி விகிதங்களுடன், இந்த இரண்டு தயாரிப்புகளும் 18 சதவீத ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவதால் அவற்றை எளிதாக அணுக முடியும். அறிமுகப்படுத்தப்பட்டால், இவை ஏரோக்ஸ் மற்றும் ஆர்15-ஐ விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
- யமஹா FZ X ஹைப்ரிட், மற்ற FZ மாடல்களிலிருந்து பவர் யூனிட்டை பெற்றிருக்கிறது.
- தொழில்நுட்பங்கள் பேட்டரி அசிஸ்ட் அக்செல்லரேஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் செயல்திறனை வழங்குகின்றன.
யமஹா நிறுவனம் இந்தியாவில் FZ X ஹைப்ரிட்டை ரூ.1.50 லட்சம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட யமஹா FZ-S ஹைப்ரிட் மாடலில் இருந்து உத்வேகம் பெறுகிறது. இருப்பினும், இந்த நிறுனம் இப்போது எரிபொருள் திறன், செயல்திறன் மற்றும் வசதியை மேம்படுத்தும் அம்சங்களை கொண்டு வந்துள்ளது.
எஞ்சின் மற்றும் பவர்டிரெய்ன்:
யமஹா FZ X ஹைப்ரிட், மற்ற FZ மாடல்களிலிருந்து பவர் யூனிட்டை பெற்றிருக்கிறது. இது 149cc ஃபியூவல்-இன்ஜெக்ட் செய்யப்பட்ட 4-ஸ்டிரோக், SOHC, ஏர்-கூல்டு எஞ்சின் கொண்டுள்ளது. இந்த யூனிட் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது 7,250rpm இல் 12.4 hp பவர் மற்றும் 5,500rpm இல் 13.3 Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
புதிய அம்சங்கள்:

யமஹா FZ X ஹைப்ரிட், ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) மற்றும் ஸ்டாப் & ஸ்டார்ட் சிஸ்டம் (SSS) போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த தொழில்நுட்பங்கள் பேட்டரி அசிஸ்ட் அக்செல்லரேஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் செயல்திறனை வழங்குகின்றன. இது செயலற்ற நிலையில் இயந்திரத்தை தானாகவே அணைத்து, விரைவான கிளட்ச் செயல்பாட்டால் எஞ்சினை ரீஸ்டார்ட் செய்யும் வசதியை வழங்குகிறது.
இது Y-Connect செயலி மூலம் ஸ்மார்ட்போன்களுடன் எளிதாக இணைக்கும் புதிய 4.2-இன்ச் முழு-வண்ண TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையும் பெறுகிறது. இதனுடன், டர்ன்-பை-டர்ன் (TBT) நேவிகேஷன் கூகுள் மேப்ஸூடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. புதிய FZ X ஹைப்ரிட் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் சிங்கில்-சேனல் ABS ஆகியவற்றையும் பெறுகிறது.
இந்திய விலை:
புதிய யமஹா FZ X ஹைப்ரிட் இந்தியாவில் ரூ.1,49,990 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் ரூ.1,29,990 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும் ஹைப்ரிட் அல்லாத FZ X-ஐயும் தேர்வு செய்யலாம்.
- புதிய மாடல் TFT திரையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புதிய FZ நாட்டில் தற்போதுள்ள FZ சீரிசின் மிகவும் மலிவு விலை மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யமஹா நிறுவனம் தனது உலகளாவிய மாடல்களை பன்முகப்படுத்த நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் யமஹா நிறுவனம் FZ சீரிசை பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது. இதில் 149 cc எஞ்சின் உள்ளது. சமீபத்தில், இந்த நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய FZ மோட்டார்சைக்கிள் மாடலுக்கான வடிவமைப்பு காப்புரிமையை பெற விண்ணப்பித்து இருந்தது.
காப்புரிமை விண்ணப்பம் மூலம் வடிவமைப்பு கூறுகள் மற்றும் மாற்றங்களை மறைக்கப்பட்டு இருந்தாலும், புதிய யமஹா FZ பைக்கில் எதிர்பார்க்கப்படும் சில விவரங்களை இது வெளிப்படுத்துகிறது. அதன்படி இது யமஹா FZ S-FI போன்ற ஒரு கலப்பின பவர்டிரெய்னைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய யமஹா FZ சில வடிவமைப்பு மாற்றங்களைச் சந்தித்திருப்பதை காப்புரிமை புகைப்படம் காட்டுகிறது. வரவிருக்கும் FZ மாடலில் டோன்-டவுன் வடிவமைப்பு கூறுகள் மற்றும் பெட்ரோல் டேங்கில் டர்ன் இண்டிகேட்டர்கள் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.
மேலும், புதிய மாடல் TFT திரையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிசின் மற்ற மாடல்களில் பெயின்ட் செய்யப்பட்ட ரிம் அமைப்பைத் தவிர்க்க தயாராக உள்ளது.
இந்தியாவில் வரவிருக்கும் மோட்டார்சைக்கிளின் குறிப்பிட்ட விவரங்கள் அல்லது வெளியீட்டு விவரத்தை யமஹா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், வடிவமைப்பு காப்புரிமை பெற்றிருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புதிய FZ நாட்டில் தற்போதுள்ள FZ சீரிசின் மிகவும் மலிவு விலை மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் அதன் FZ சீரிசில் மொத்தம் ஏழு மாடல்களைக் கொண்டுள்ளது, அவற்றில் FZ-X, FZ S-FI வெர்ஷன் 3.0, FZ S-FI வெர்ஷன் 4.0, FZ S-FI வெர்ஷன் 4.0 DLX, FZ-FI, FZ S-FI, மற்றும் FZ S ஹைப்ரிட் ஆகியவை அடங்கும்.
இவற்றில் யமஹா FZ S FI என்பது இந்த சீரிசில் குறைந்த விலை பைக் ஆகும். இதன் விலை ரூ.1.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்று தொடங்குகிறது.
- யமஹாவின் வடிவமைப்பு மற்றும் பிராண்ட் நெறிமுறைகளைக் கொண்டிருக்கும்.
- புதிய EV இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள யமஹாவின் உலகளாவிய பொறியியல் குழுக்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.
யமஹா நிறுவனம் விரைவில் ரிவர் இண்டியை அடிப்படையாக கொண்ட மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் புத்தம் புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. வரவிருக்கும் யமஹா EV ஆனது RY01 என்ற குறியீட்டுப் பெயரை கொண்டுள்ளது. மேலும் இது ரிவர் இண்டியின் அதே பேட்டரி மேலாண்மை அமைப்பு மற்றும் பவர்டிரெய்னைப் பயன்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்போது, ஜப்பானின் யமஹா மோட்டார் நிறுவனம் பிப்ரவரி 2024 இல் ரிவரில் சுமார் 40 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. புதிய யமஹா RY01 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பண்டிகை காலத்தில் உற்பத்தியாகும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய EV இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள யமஹாவின் உலகளாவிய பொறியியல் குழுக்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. இது யமஹாவின் வடிவமைப்பு மற்றும் பிராண்ட் நெறிமுறைகளைக் கொண்டிருக்கும். ஆனால் பொறியியல், சோதனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அனைத்தும் ரிவர் மூலம் மேற்கொள்ளப்படும்.

இது பெங்களூருவில் உள்ள ரிவர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, 11 ஆம் தேதி முதல் பிற உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் உற்பத்தி அளவில் அதிகரிப்பு இருக்கும், மேலும் உற்பத்தி பெரும்பாலும் உள்ளூர் மயமாக்கப்படும், செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
யமஹா போன்ற ஒரு உலகளாவிய நிறுவனம், பவர்டிரெய்ன், பொறியியல், பேட்டரி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை ஆகியவற்றைக் கொண்ட ஒரு இந்திய எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப்-ஐ நம்புவது, இந்தியாவின் வளர்ந்து வரும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் மின்சார வாகனங்களுக்கான உற்பத்தித் திறன்களுக்கு ஒரு சான்றாகும்.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்போது, புதிய யமஹா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், டிவிஎஸ் ஐகியூப், ஏத்தர் ரிஸ்டா, பஜாஜ் செட்டாக், ஹீரோ விடா V1 மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சுசுகி இ-அக்சஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
- 150cc திறன் கொண்டதாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த மோட்டார் சைக்கிள் 149cc ப்ளூ கோர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது
யமஹா நிறுவனம் FZ-S Fi ஹைப்ரிட் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
நாட்டில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ள 150cc திறன் கொண்ட இந்த பைக்கின் விலை ₹1.45 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
யமஹா FZ-S Fi ஹைப்ரிட் பைக் ரேசிங் ப்ளூ மற்றும் சியான் மெட்டாலிக் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த மோட்டார் சைக்கிள் 149cc ப்ளூ கோர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பைக் என்ஜின் 7,250 ஆர்.பி.எம். இல் 12.2 குதிரைத்திறனையும் 5,500 ஆர்.பி.எம். இல் 13.3 Nm டார்க் விசையையும் வெளிப்படுத்தும்.
- யமஹா நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் மாடல் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய 2023 மாடலில் ஏராளமான புது அம்சங்கள், டிசைன் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
யமஹா நிறுவனத்தின் எக்ஸ்மேக்ஸ் மேக்சி ஸ்கூட்டர்கள் ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஐரோப்பாவில் மட்டும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற எக்ஸ்மேக்ஸ் மாடல்களில் புது அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.
2023 யமஹா எக்ஸ்மேக்ஸ் மாடல்கள் ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த 300சிசி மாடல் தற்போது ஸ்டாண்டர்டு மற்றும் டெக் மேக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 4.2 இன்ச் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, 3.2 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் டிஎப்டி யூனிட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும். வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் யமஹா மைரைடு செயலி மூலம் மோட்டார்சைக்கிளை கனெக்ட் செய்து கொள்ள வேண்டும். இது மியூசிக் கண்ட்ரோல் வசதியையும் கொண்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் எல்சிடி டேஷ் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்கூட்டரின் என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் 292சிசி,சிங்கில் சிலிண்டர் என்ஜின், CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27.6 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள், இருபுறமும் சிங்கில் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது கேள்விக்குறியான விஷயம் தான்.
- யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் புளூ ஸ்கொயர் பெயரில் பிரத்யேக விற்பனை மையங்களை கட்டமைத்து வருகிறது.
- நாடு முழுக்க யமஹா புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் மூலம் சர்வதேச மாடல்களை விற்பனை செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.
இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் நாடு முழுக்க 100 புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களை கட்டமைத்துள்ளது. இந்திய சந்தையில் ரிடெயில் விற்பனையை உறுதிப்படுத்த 3s நெட்வொர்க்கை யமஹா புளூ தீமிற்குள் கொண்டு வரவும் யமஹா திட்டமிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் யமஹா சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் மாடல்களை இந்தியாவுக்கு கொண்டுவரும் என யமஹா தெரிவித்துள்ளது. எந்தெந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், யமஹா டெனர் 700 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒற்றை களமாக புளூ ஸ்கொயர் விற்பனை மையம் துவங்கப்பட்டது. யமஹாவின் ரேசிங் டிஎன்ஏவுடன் வாடிக்கையாளர்கள் இணையும் நோக்கில் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. யமஹா உருவாக்கி இருக்கும் புளூ ஸ்டிரீக்ஸ் ரைடர் குழுவில் வாடிக்கையாளர்கள் இணையவும் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் பாலமாக செயல்படுகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு புளு ஸ்கொயர் விற்பனையகமும் யமஹா நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள்- யமஹா YZF R15M, யமஹா ஏரோக்ஸ் 155 போன்ற மாடல்களை காட்சிப்படுத்தி வருகின்றன. இத்துடன் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களில் யமஹாவின் சர்வதேச மாடல்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.






