என் மலர்
பைக்

ரூ. 1.49 லட்சத்தில் 155சிசி பைக்... யமஹாவின் சிறப்பான சம்பவம்..!
- இந்த பைக்கில் டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் நிலையாக வழங்கப்படுகிறது.
- இந்த சேசிஸ், யமஹாவின் டெல்டாபாக்ஸ் ஃபிரேமில் இடம்பெற்றுள்ளது.
யமஹா நிறுவனம் முற்றிலும் புதிய FZ-Rave பைக்குடன் XSR155 மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய XSR155 மாடலின் விலை ரூ.1,49,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யமஹாவின் நவீன-ரெட்ரோ மாடல்கள் பிரிவில் மிகவும் சிறிய மாடலாக XSR155 இணைந்துள்ளது.
இந்த பைக் MT-15 மாடலுடன் கிளாசிக் தோற்றத்தை இணைத்தது போன்ற பிம்பம் கொண்டுள்ளது. இத்துடன் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், டியர் டிராப் டேன்க், எல்சிடி கன்சோல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய XSR155 பைக்கில் 155cc, லிக்விட்-கூல்டு, 4-வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 18.1bhp பவர், 14.2Nm டார்க் வெளிப்படுத்துகிறது. மேலும், இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் நிலையாக வழங்கப்படுகிறது.
இந்த சேசிஸ், யமஹாவின் டெல்டாபாக்ஸ் ஃபிரேமில் இடம்பெற்றுள்ளது. இத்துடன் அப்சைடு-டவுன் முன் ஃபோர்க்குகள் மற்றும் லின்க்டு-டைப் மோனோஷாக் கொண்டிருக்கிறது. புதிய பைக்கை யமஹா நிறுவனம் -மெட்டாலிக் கிரே, விவிட் ரெட், கிரேயிஷ் கிரீன் மெட்டாலிக் மற்றும் மெட்டாலிக் ப்ளூ என நான்கு நிறங்களில் வழங்குகிறது. மேலும், இத்துடன் இரண்டு பிரத்யேக அக்சஸரீ பேக்குகள் வழங்கப்படுகின்றன.






