என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜி கார்"

    • டேஷ்போர்டும் கருப்பு நிறம் கொண்டுள்ளது.
    • புதிய வின்ட்சர் EV இன்ஸ்பயர் இயந்திர ரீதியாக எந்த மாற்றமும் பெறவில்லை.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வின்ட்சர் எலெக்ட்ரிக் காரை இன்ஸ்பயர் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. டாப்-எண்ட் "எசென்ஸ்" வேரியண்டின் மேல் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் புதிய வெர்ஷனில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

    வெளிப்புறத்தில் வின்ட்சர் EV இன்ஸ்பயர் பியர்ல் ஒயிட் மற்றும் ஸ்டாரி பிளாக் என டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய பிளாக்டு-அவுட் அலாய் வீல்கள், ரோஸ் கோல்ட் கிளாடிங், கருப்பு ORVMகள் மற்றும் 'இன்ஸ்பயர்' பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளன.

    உட்புறம் சாங்ரியா ரெட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. அவை பிளாக் லெதர் அப்ஹோல்ஸ்டரி கொண்டுள்ளன. டேஷ்போர்டும் கருப்பு நிறம் கொண்டுள்ளது. முன்புற கிரில் பகுதி ரோஸ் கோல்டு நிறமும், பாடி சைடு மோல்டிங்ஸ், 'இன்ஸ்பயர்' மெத்தைகள், லெதர் கீ கவர் மற்றும் பம்பர் கார்னர் ப்ரொடெக்டர்கள் உள்ளது.



    புதிய வின்ட்சர் EV இன்ஸ்பயர் இயந்திர ரீதியாக எந்த மாற்றமும் பெறவில்லை. இதிலும் 100 கிலோவாட் (134hp பவர்) /200 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் FWD மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 38kWh LFP பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 331 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.

    எம்ஜி வின்ட்சர் EV இன்ஸ்பயர் மாடல் இந்திய சந்தையில் வின்ட்சர் எலெக்ட்ரிக் காரின் ஒரு வருட நிறைவு மற்றும் இந்தியாவில் 40,000 யூனிட் விற்பனையையும் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    • பிராண்டின் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார், ஆக்ரோஷமான, லோ-ப்ரோஃபைல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
    • எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் 77 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், சைபர்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இது முன்னதாகவே இந்திய சந்தைக்காக வெளியிடப்பட்டது. எனினும் இதன் விலை விவரங்கள் நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. "உலகின் வேகமான MG" என்று அழைக்கப்படும் இது, M9 எம்பிவி மாடலை தொடர்ந்து, நிறுவனத்தின் செலக்ட் டீலர்ஷிப் மூலம் விற்கப்பட இருக்கும் இரண்டாவது வாகனமாகும்.

    இந்த பிராண்டின் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார், ஆக்ரோஷமான, லோ-ப்ரோஃபைல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது நேர்த்தியான, ஸ்வெப்ட்-பேக் LED ஹெட்லைட்களால் சிறப்பிக்கப்படுகிறது. இது அதன் ஸ்போர்ட் தோற்றத்தை மேம்படுத்துகிறது. இந்த வடிவமைப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த காரில் சிசர் டோர் வழங்கப்பட்டுள்ளது.

    உள்புறத்தில் எம்ஜி சைபர்ஸ்டர் மூன்று டிஜிட்டல் டிஸ்ப்ளேக்களுடன் பல கண்ட்ரோல்களை கொண்ட தட்டையான ஸ்டீரிங் வீலைக் கொண்டுள்ளது. சென்டர் கன்சோலில் ரூஃப் மெக்கானிசம், டிரைவ் செலக்டர் மற்றும் HVAC கட்டுப்பாடுகளை மேற்கொள்ள மற்றொரு திரை மற்றும் பொத்தான்கள் உள்ளன.

    ஸ்டைலான வெளிப்புறத்தின் கீழே, இந்த இரண்டு இருக்கைகள் கொண்ட மின்சார வாகனம் ஒவ்வொரு ஆக்சிலும் நிலைநிறுத்தப்பட்ட இரட்டை மின்சார மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆல்-வீல் டிரைவ் திறன்களை வழங்குகிறது. இந்த பவர்டிரெய்ன் 510 hp பவர் மற்றும் 725 Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது.

    இந்த எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் 77 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, AWD உள்ளமைவை உருவகப்படுத்த ஒவ்வொரு ஆக்சிலும் இரண்டு ஆயில்-கூல்டு மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 3.2 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. CLTC சுழற்சியின்படி ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 580 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று எம்ஜி கூறுகிறது.

    • எம்ஜி M9 காரில் 90-kWh NMC பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
    • ஒருங்கிணைந்த LED டெயில்-லைட் வடிவமைப்பு ஒரு தனித்துவமான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை உறுதி செய்கிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆடம்பர பிராண்ட் பிரிவான எம்ஜி செலக்ட் மூலம் எம்ஜி M9 தி பிரசிடென்ஷியல் லிமோசின் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய எம்ஜி M9 வேரியண்ட் இந்திய சந்தையில் ரூ. 69.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய எம்ஜி M9 அதிநவீனத்தையும் புதுமையையும் விரும்புவோருக்கு ஏற்ற மாடல் ஆகும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி M9 விநியோகங்கள் ஆகஸ்ட் 10-ந்தேதி முதல் தொடங்கும்.

    பேட்டரி மற்றும் பவர்டிரெய்ன்:

    எம்ஜி M9 காரில் 90-kWh NMC பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முறையே 245 hp பவர் மற்றும் 350 Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும் 548 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் கொண்டுள்ளது. இந்த மாடல் 11-kW வால் பாக்ஸ் சார்ஜரையும், 3.3-kW போர்ட்டபிள் சார்ஜரையும் வழங்குகிறது. மேலும், வாழ்நாள் உத்தரவாதத்தையும் 3 ஆண்டுகள்/வரம்பற்ற கிலோமீட்டர் வாகன உத்தரவாதத்தையும் பெறுகிறது.



    வெளிப்புற சிறப்பம்சங்கள்:

    எம்ஜி M9 மூன்று தனித்துவமான வண்ணங்களில் வழங்கப்படுகிறது. அதாவது பியர்ல் லஸ்டர் ஒயிட், மெட்டல் பிளாக் மற்றும் கான்கிரீட் கிரே. எம்ஜி M9 ஒரு தனித்துவமான வெளிப்புற வடிவமைப்பைப் பெறுகிறது. அதன் நவீன இருப்பை உறுதிப்படுத்தும் ஒரு தடிமனான ட்ரெப்சாய்டல் மெஷ் கிரில் மூலம் சிறப்பிக்கப்படுகிறது. ஸ்பிலிட் LED ஹெட்லைட்கள் மற்றும் கனெக்ட்டெட் DRLகள் கூர்மையான மற்றும் அதிநவீன முன்புற தோற்றத்தை உருவாக்குகிறது. பின்புறத்தில், ஒருங்கிணைந்த LED டெயில்-லைட் வடிவமைப்பு ஒரு தனித்துவமான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை உறுதி செய்கிறது.

    உட்புறம் மற்றும் அம்சங்கள்:

    உட்புறத்தில், எம்ஜி M9 16-வழிகளில் சரிசெய்யும் வசதி, 8 மசாஜ் அமைப்புகள், ஹீட்டிங் மற்றும் வென்டிலேஷன் ஆகியவற்றைப் பெறுகிறது. இதில் டூயல் சன்ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 13-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் (சப் வூஃபர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் உட்பட) மற்றும் பலவற்றைப் பெறுகிறது.

    விலை:

    இந்தியாவில் எம்ஜி M9 எலெக்ட்ரிக் MPV கார் ரூ. 69.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுக விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் ரூ.1,00,000 செலுத்தி எம்ஜி M9 காரை முன்பதிவு செய்யலாம்.

    • எம்9 லிமோசினை அறிமுகப்படுத்தும் திட்டங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    • எம்ஜி நிறுவனம் மஜெஸ்டர் (Majestor) மாடலின் டீசரை வெளியிட்டுள்ளது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், தங்கள் வரிசையில் உள்ள பெரும்பாலான மாடல்களுக்கு 1.5 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. வாகன விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும். விலை மாற்றங்களின் அளவு மாடல் மற்றும் வேரியண்ட்-க்கு ஏற்ப வேறுபடும். அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் மற்றும் பொருளாதார சரிசெய்தல் காரணமாக வாகனங்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் எம்ஜி பேட்ஜ் கொண்ட தற்போதைய கார்களின் வரிசை கொமெட் EV உடன் தொடங்குகிறது. இந்த மாடல் ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வருகிறது. அதைத் தொடர்ந்து ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வரும் விண்ட்சர் EV உள்ளது. இதைத் தொடர்ந்து, ஐசி எஞ்சின் கார்களின் வரிசையில், ஆஸ்டர மாடல் ரூ.11.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்குகிறது.

    அடுத்தது ஹெக்டார் ரூ.17.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. எம்ஜி குளோஸ்டர் ரூ. 41.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விலை உயர்ந்த மாடல்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் நுகர்வோருக்கு பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) வழங்குகின்றன. இந்த மாடல், காரின் விலையிலிருந்து பேட்டரி விலையைப் பிரிப்பதன் மூலம் நுகர்வோருக்கு வாகனத்தின் ஆரம்ப செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய தயாரிப்புகளுடன் ஆடம்பர சந்தையில் நுழையத் தயாராகி வருகிறது. உயர் ரக வாகனப் பிரிவில் நுழைவதற்கான அறிகுறியாக, எம்9 லிமோசினை அறிமுகப்படுத்தும் திட்டங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இந்த ஆண்டின் பிற்பகுதியில், எம்ஜி நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் வாகன வரிசையில் செயல்திறன் சார்ந்த புதுமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சைபர்-ஸ்டர் என்ற எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரையும் அறிமுகப்படுத்தும்.

    இந்த இரண்டு பிரீமியம் வாகனங்களும் புதிதாக நிறுவப்பட்ட டீலர்ஷிப் நெட்வொர்க், எம்ஜி செலக்ட் (MG Select) மூலம் விற்கப்படும். இது மிகவும் பிரத்யேக வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர எம்ஜி நிறுவனம் மஜெஸ்டர் (Majestor) மாடலின் டீசரை வெளியிட்டுள்ளது. இது குளோஸ்டர் மாடலில் இருந்து பெறப்பட்ட ஒரு சொகுசு எஸ்யூவியாக இருக்கலாம். இந்த மாடல் இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் அதன் பிரீமியம் சலுகைகளை விரிவுபடுத்துவதற்கான லட்சியத்தைக் குறிக்கிறது.

    • எம்ஜி ZS EV-யின் எக்சைட் ப்ரோ வேரியண்ட் தற்போது ரூ.18,49,800 விலையில் வாங்கலாம்.
    • இந்திய சந்தையில் இந்த பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் கார் ZS EV ஆகும்.

    எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு ஹெக்டார் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இந்திய சந்தையில் அந்நிறுவனம் அடியெடுத்து வைத்தது. இந்நிறுவனம் இந்தியாவில் செயல்பட தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் வகையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்குகிறது.

    அதன்படி எம்ஜி ZS EV பேஸ் மாடலான எக்ஸிகியூட்டிவ் வேரியண்டிற்கு ரூ.16.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) சிறப்பு விலையில் எலக்ட்ரிக் எஸ்யூவியை வழங்குகிறது. இது முந்தைய ரூ.16.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையுடன் ஒப்பிடும்போது ரூ.13,000 குறைவு ஆகும்.

    எம்ஜி ZS EV-யின் எக்சைட் ப்ரோ வேரியண்ட் தற்போது ரூ.18,49,800 விலையில் வாங்கலாம். இது முந்தைய ரூ.18,97,800 (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) விலையுடன் ஒப்பிடும்போது ரூ.48,000 சேமிப்பை பிரதிபலிக்கிறது. டாப் எண்ட் மாடல்களான எக்ஸ்க்ளூசிவ் பிளஸ் அல்லது எசென்ஸை தேர்வுசெய்வர்கள் மிகப்பெரிய சேமிப்பைப் பெறலாம்.

    எம்ஜி ZS EV-யின் எக்ஸ்க்ளூசிவ் பிளஸ் வேரியண்டின் விலை தற்போது ரூ.19,49,800 ஆக உள்ளது. இதற்கு முன் வெளியான பட்டியலில் ரூ.23,64,800 விலையிலிருந்து ரூ.4.15 லட்சம் குறைப்பு ஆகும். இதற்கிடையில், எம்ஜி ZS EV-யின் டாப் எண்ட் எசென்ஸ் வேரியண்ட் தற்போது ரூ.20,49,800 தொடக்க விலையில் வழங்கப்படுகிறது. இதன் விளைவாக முந்தைய விலை ரூ.24,93,800 (எக்ஸ்-ஷோரூம்) உடன் ஒப்பிடும்போது ரூ.4.44 லட்சம் சேமிப்பு கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் இந்த பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் கார் ZS EV ஆகும். இந்த எஸ்யூவி டாடா Curvv.ev, ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், மஹிந்திரா BE6 மற்றும் நாட்டில் உள்ள பிற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் 50.3 kWh பேட்டரி பேக்குடன் கிடைக்கிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 461 கிமீ வரை செல்லும்.

    • எம்ஜி‌விண்ட்சர் 136 Hp பவரையும் 200 Nm டார்க்கையும் வழங்குகிறது.
    • இது 135 டிகிரி வரை சாய்ந்திருக்கும் 'Aero Lounge' இருக்கைகளைக் கொண்டுள்ளது.

    இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகனமான எம்ஜி விண்ட்சர் (Windsor), எட்டு மாத குறுகிய காலத்தில் 27,000 விற்பனை மைல்கல்லைத் தாண்டியுள்ளதாக எம்ஜி மோட்டார் இந்தியா அறிவித்துள்ளது.

    அறிமுகம் செய்யப்படுத்தப்பட்டதில் இருந்து எம்ஜி விண்ட்சர் நாடு முழுவதும் வலுவான விற்பனையை தொடர்ந்து நிரூபித்து, அதன் தலைமையை வலுப்படுத்துகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்ட்சர் EV Pro, பெரிய பேட்டரி மற்றும் பல புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன், மே 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 8,000 முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

    பெருநகரங்களைத் தவிர, வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்தும் இந்த CUV-க்கு வலுவான தேவை உள்ளது. பெருநகரங்கள் அல்லாத நகரங்கள் அதன் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 48% ஆகும்.

    எம்ஜி விண்ட்சர் இந்திய EV சந்தையை புயலால் தாக்கியுள்ளது. பரவலான தேவையைப் பிடித்து, தொழில்துறையில் ஒரு கேம்-சேஞ்சராக அதன் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. கூடுதலாக, எம்ஜி விண்ட்சர் 'ஆண்டின் மின்சார கார் - NDTV ஆட்டோ விருதுகள் 2025' உட்பட 30 க்கும் மேற்பட்ட விருதுகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    ரூ.9.99L + ரூ.3.9/கிமீ+ என்ற ஆரம்ப BaaS விலையுடன் வழங்கப்படும் இந்த CUV, ஒரு செடானின் விரிவாக்கத்தையும் ஒரு SUVயின் பல்துறைத்திறனையும் ஒருங்கிணைக்கிறது.

    எம்ஜிவிண்ட்சர் 136 Hp பவரையும் 200 Nm டார்க்கையும் வழங்குகிறது. இந்த மாடல் பாரம்பரிய பிரிவு கருத்தை மீறி, எதிர்கால 'AeroGlide' வடிவமைப்பைக் கொண்டுள்ளது. உள்ளே, காரின் வணிக வகுப்பு வசதியுடன் வழங்கப்படுகிறது. இது 135 டிகிரி வரை சாய்ந்திருக்கும் 'Aero Lounge' இருக்கைகளைக் கொண்டுள்ளது. இது மிகுந்த வசதியை வழங்குகிறது. கூடுதலாக, சென்டர் கன்சோலில் உள்ள மிகப்பெரிய 15.6" டச் டிஸ்ப்ளே ஒரு உள்ளுணர்வு ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது.

    • புதிய எம்ஜி வின்ட்சர் ப்ரோ மாடலில் 52.9 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.
    • பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 449 கிமீ வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா சமீபத்தில் இந்திய சந்தையில் வின்ட்சர் EV ப்ரோ மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் கார் BaaS (பேட்டரி ஒரு சேவையாக) உடன் ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இது ஏற்கனவே நாட்டில் விற்பனையில் உள்ள வின்ட்சர் EVயின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். மேலும் நீட்டிக்கப்பட்ட அம்சங்களுடன் பெரிய பேட்டரியுடன் வருகிறது. இப்போது, அதிகாரப்பூர்வ வெளியீடு மற்றும் 8,000 முன்பதிவுகளுடன் முதற்கட்ட யூனிட்கள் நிறுத்தப்பட்ட நிலையில், இந்த கார் டீலர்ஷிப்களை வரத் தொடங்கியுள்ளது.

    புதிய எம்ஜி வின்ட்சர் ப்ரோ மாடலில் 52.9 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 449 கிமீ வரை செல்லும் என்று கூறப்படுகிறது. இது நிலையான 38 kWh பேட்டரி பேக் வழங்கும் 332 கிமீ வரம்பை விட அதிகமாகும். இதற்கிடையில், இந்த காரின் பவர் மாறாமல் உள்ளது. இந்த காரும் 136 hp பவர் மற்றும் 200 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் மின்சார மோட்டாரைக் கொண்டுள்ளது.

    வடிவமைப்பைப் பொறுத்தவரை, எம்ஜி வின்ட்சர் அதன் தற்போதைய தோற்றத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், பல புதுப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கார் தற்போது 18-இன்ச் அலாய் வீல்களுடன் ஒரு புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் டெயில்கேட்டில் "ADAS" பேட்ஜ் உள்ளது. இவை அனைத்தும் செலடான் புளூ (Celadon Blue), ஔரோரா சில்வர் (Aurora Silver) மற்றும் கிளேஸ் ரெட் (Glaze Red) போன்ற புதிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

     


    வின்ட்சர் ப்ரோ மாடலின் கேபினுக்குள் புதுப்பிப்புகளும் காணப்படுகின்றன. நிலையான பதிப்பில் காணப்படும் கருப்பு நிற இன்டீரியருக்குபதிலாக இந்த பிராண்ட் இப்போது இலகுவான உட்புறத்தை வழங்குகிறது. கூடுதலாக, அம்சங்களின் பட்டியலில் இப்போது பவர்டு டெயில்கேட் மற்றும் முந்தைய மாடலில் இல்லாத டிராஃபிக் ஜாம் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் லெவல் 2 ADAS போன்ற வசதிகள் உள்ளன.

    எம்ஜி வின்ட்சர் ப்ரோ மாடலில் வெஹிகில்-டு-லோடு (V2L) மற்றும் வெஹிகில்-டு-வெஹிகில் (V2V) திறன்களுடன் வருகிறது. இதில் V2L அம்சம் உரிமையாளர் வாகனத்தின் சக்தியைப் பயன்படுத்தி பல்வேறு சாதனங்களை இயக்க அனுமதிக்கிறது, அதே நேரத்தில் V2V அம்சம் இணக்கமான வாகனங்களுக்கு இடையே ஆற்றல் பகிர்வை எளிதாக்குகிறது.

    • பியூர் பிளாக் அல்லது காக்னாக் பிரவுன் நிற இன்டீரியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன.
    • இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 430 கிமீ தூரம் செல்லும் என்று கூறப்படுகிறது.

    கார் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட MG M9 இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்வுக்கு முன்னதாக இந்த மாடல் கார்கள் ஷோரூம்களுக்கு வர தொடங்கி உள்ளன. இதனை தொடர்ந்து நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும். சைபர்ஸ்டர் மாடலுடன் இணைந்து, கியா நிறுவனத்தின் சொகுசு கார் டீலர்ஷிப் வழியாக விற்கப்படும் பிராண்டின் இரண்டாவது மாடலாக M9 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மின்சார MPV-யின் உட்புற இடத்தை அதிகப்படுத்தும் நோக்கில் ஒரு பாக்ஸி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒரு தனித்துவமான தோற்றத்தை உருவாக்க, வாகனத்தின் முன்பக்கம் LED விளக்குகளால் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்பக்கம் பம்பரில் ஒருங்கிணைக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள் உள்ளன. அவை வாகனத்தின் கீழ் பகுதி வரை நீட்டிக்கப்படும் ஒரு குரோம் டிரிம் மூலம் சூழப்பட்டுள்ளன.

    வாகனத்தின் பின்புறம் இந்த வடிவமைப்பை எதிரொலிக்கிறது. அதன்படி பின்புறத்தில் குரோம் அக்சென்ட்கள் மற்றும் முழு அகல லைட் பார் மூலம் இணைக்கப்பட்ட செங்குத்தான டெயில் லைட்களைக் கொண்டுள்ளது. அதன் அழகியல் கவர்ச்சியை மேம்படுத்த, பிராண்ட் பின்புற பம்பரில் சில கோடுகள் மற்றும் வரையறைகளை வழங்கியுள்ளது.

    எம்ஜி M9 காருக்கான அம்சங்கள் பட்டியலில் பனோரமிக் சன்ரூஃப், 64-வண்ண சுற்றுப்புற விளக்குகள், 12-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், சௌகரியமான இருக்கைகள், இருக்கைகளை 16-வழிகளில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி மற்றும் காற்றோட்டம் மற்றும் வெப்பமூட்டும் செயல்பாடுகளுடன் 8 மசாஜ் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.

    இவை அனைத்தும் பியூர் பிளாக் அல்லது காக்னாக் பிரவுன் நிற இன்டீரியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. எம்ஜி M9 மாடலில் 90 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும். இந்த அலகு 240 hp மற்றும் 350 Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்யும் மின்சார மோட்டாரை இயக்குகிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 430 கிமீ தூரம் செல்லும் என்று கூறப்படுகிறது. 120 kW DC சார்ஜரைப் பயன்படுத்தி பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 30 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

    • புதிய எம்ஜி ZS ஹைப்ரிட்+ 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டிருக்கிறது.
    • எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது புதிய ZS மாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய 2025 எம்ஜி ZS மாடல் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.

    உலகளவில், புதிய ZS மாடல் ஹைப்ரிட்+ வடிவில் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில், இந்த கார் ஐசி எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் என இருவிதங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் எலெக்ட்ரிக் மாடல் ZS EV என்றும் ஐசி எஞ்சின் கொண்ட மாடல் ஆஸ்டர் என்ற பெயரிலும் விற்பனைக்கு வரும்.

    வெளிப்புறத்தில், புதிய ZS மாடல் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பெரிய கிரில், அகலமான மற்றும் செங்குத்தாக வடிவமைக்கப்பட்ட ஏர் டேம்ப்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டரை இணைக்கும் அளவுக்கு அகல லைட் பார் மற்றும் மெல்லிய எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் எம்ஜி லோகோ பொனெட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    பக்கவாட்டில் இந்த கார் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் சற்றே மாற்றம் செய்யப்பட்ட அலாய் வீல் டிசைன் கொண்டுள்ளது. பின்புறத்தில், முற்றிலும் புதிய ZS மாடல் அதிக மாற்றங்களை கொண்டுள்ளது. இதன் பம்ப்பர் டிசைன் மாற்றப்பட்டு, டெயில் லேம்ப்களும் புதுவித டிசைன் கொண்டிருக்கின்றன.



    உட்புறத்தில், 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், மறுவடிவமைப்பு கொண்ட ஏசி வென்ட்கள், புதிய ஸ்டீரிங், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ரீடிசைன் செய்யப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் புதிய கியர் லீவர் கொண்டுள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய ZS ஹைப்ரிட்+ வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ADAS சூட், டைப்-சி சார்ஜிங் போர்ட், ஆட்டோ ஹோல்டு, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, 360 டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய எம்ஜி ZS ஹைப்ரிட்+ 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டிருக்கிறது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இவை இரண்டும் இணைந்து 192 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 8.7 நொடிகளில் எட்டிவிடும்.

    ×