என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் காருக்கு வேற லெவல் சலுகை வழங்கும் எம்ஜி மோட்டார்
    X

    இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் காருக்கு வேற லெவல் சலுகை வழங்கும் எம்ஜி மோட்டார்

    • எம்ஜி ZS EV-யின் எக்சைட் ப்ரோ வேரியண்ட் தற்போது ரூ.18,49,800 விலையில் வாங்கலாம்.
    • இந்திய சந்தையில் இந்த பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் கார் ZS EV ஆகும்.

    எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு ஹெக்டார் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இந்திய சந்தையில் அந்நிறுவனம் அடியெடுத்து வைத்தது. இந்நிறுவனம் இந்தியாவில் செயல்பட தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் வகையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்குகிறது.

    அதன்படி எம்ஜி ZS EV பேஸ் மாடலான எக்ஸிகியூட்டிவ் வேரியண்டிற்கு ரூ.16.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) சிறப்பு விலையில் எலக்ட்ரிக் எஸ்யூவியை வழங்குகிறது. இது முந்தைய ரூ.16.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையுடன் ஒப்பிடும்போது ரூ.13,000 குறைவு ஆகும்.

    எம்ஜி ZS EV-யின் எக்சைட் ப்ரோ வேரியண்ட் தற்போது ரூ.18,49,800 விலையில் வாங்கலாம். இது முந்தைய ரூ.18,97,800 (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) விலையுடன் ஒப்பிடும்போது ரூ.48,000 சேமிப்பை பிரதிபலிக்கிறது. டாப் எண்ட் மாடல்களான எக்ஸ்க்ளூசிவ் பிளஸ் அல்லது எசென்ஸை தேர்வுசெய்வர்கள் மிகப்பெரிய சேமிப்பைப் பெறலாம்.

    எம்ஜி ZS EV-யின் எக்ஸ்க்ளூசிவ் பிளஸ் வேரியண்டின் விலை தற்போது ரூ.19,49,800 ஆக உள்ளது. இதற்கு முன் வெளியான பட்டியலில் ரூ.23,64,800 விலையிலிருந்து ரூ.4.15 லட்சம் குறைப்பு ஆகும். இதற்கிடையில், எம்ஜி ZS EV-யின் டாப் எண்ட் எசென்ஸ் வேரியண்ட் தற்போது ரூ.20,49,800 தொடக்க விலையில் வழங்கப்படுகிறது. இதன் விளைவாக முந்தைய விலை ரூ.24,93,800 (எக்ஸ்-ஷோரூம்) உடன் ஒப்பிடும்போது ரூ.4.44 லட்சம் சேமிப்பு கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் இந்த பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் கார் ZS EV ஆகும். இந்த எஸ்யூவி டாடா Curvv.ev, ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், மஹிந்திரா BE6 மற்றும் நாட்டில் உள்ள பிற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் 50.3 kWh பேட்டரி பேக்குடன் கிடைக்கிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 461 கிமீ வரை செல்லும்.

    Next Story
    ×