என் மலர்
கார்

வின்ட்சர் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்த எம்ஜி மோட்டார்
- டேஷ்போர்டும் கருப்பு நிறம் கொண்டுள்ளது.
- புதிய வின்ட்சர் EV இன்ஸ்பயர் இயந்திர ரீதியாக எந்த மாற்றமும் பெறவில்லை.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வின்ட்சர் எலெக்ட்ரிக் காரை இன்ஸ்பயர் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. டாப்-எண்ட் "எசென்ஸ்" வேரியண்டின் மேல் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் புதிய வெர்ஷனில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து பார்ப்போம்...
வெளிப்புறத்தில் வின்ட்சர் EV இன்ஸ்பயர் பியர்ல் ஒயிட் மற்றும் ஸ்டாரி பிளாக் என டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய பிளாக்டு-அவுட் அலாய் வீல்கள், ரோஸ் கோல்ட் கிளாடிங், கருப்பு ORVMகள் மற்றும் 'இன்ஸ்பயர்' பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளன.
உட்புறம் சாங்ரியா ரெட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. அவை பிளாக் லெதர் அப்ஹோல்ஸ்டரி கொண்டுள்ளன. டேஷ்போர்டும் கருப்பு நிறம் கொண்டுள்ளது. முன்புற கிரில் பகுதி ரோஸ் கோல்டு நிறமும், பாடி சைடு மோல்டிங்ஸ், 'இன்ஸ்பயர்' மெத்தைகள், லெதர் கீ கவர் மற்றும் பம்பர் கார்னர் ப்ரொடெக்டர்கள் உள்ளது.
புதிய வின்ட்சர் EV இன்ஸ்பயர் இயந்திர ரீதியாக எந்த மாற்றமும் பெறவில்லை. இதிலும் 100 கிலோவாட் (134hp பவர்) /200 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் FWD மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 38kWh LFP பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 331 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.
எம்ஜி வின்ட்சர் EV இன்ஸ்பயர் மாடல் இந்திய சந்தையில் வின்ட்சர் எலெக்ட்ரிக் காரின் ஒரு வருட நிறைவு மற்றும் இந்தியாவில் 40,000 யூனிட் விற்பனையையும் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.






