என் மலர்
கார்

ரூ. 2.15 லட்சம் வரை தள்ளுபடி... மாருதி சுசூகியின் வேற லெவல் ஆஃபர்ஸ்..!
- சியாஸ் கார் இந்தியச் சந்தையில் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.
- அனைத்து வேரியண்ட்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.
மாருதி சுசூகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள், தள்ளுபடி வழங்குகிறது. விற்பனையை அதிகப்படுத்தவும், ஆண்டு இறுதியில் வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்கும் நோக்கிலும் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மாருதியின் இன்விக்டோ, ஜிம்னி மற்றும் பிரான்க்ஸ் கார் மாடல்களுக்கு டிசம்பர் மாதத்துக்கான தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி இன்விக்டோ காருக்கு ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். இதில், ரொக்கத் தள்ளுபடி ரூ.1 லட்சம் வரை, ஸ்கிராப் அல்லது எக்சேஞ்ச் போனஸ் ரூ.1.15 லட்சம் வரை அடங்கும்.
சியாஸ் கார் இந்தியச் சந்தையில் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது. இருப்பினும் ஸ்டாக் உள்ளவரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தக் காருக்கு ரூ.1.3 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அனைத்து வேரியண்ட்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.
மாருதி ஜிம்னி காருக்கு ரூ.1 லட்சம் வரையிலும், இக்னிஸ் காருக்கு ரூ.80 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி கிடைக்கும். பலேனோவுக்கு ரூ.60 ஆயிரமும், XL6 மாடலுக்கு ரூ.60 ஆயிரமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.






