என் மலர்tooltip icon

    இது புதுசு

    1.4 கோடி ரூபாய்... 4 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்துள்ள பென்ஸ் V-Class
    X

    1.4 கோடி ரூபாய்... 4 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்துள்ள பென்ஸ் V-Class

    • இந்த மாடல் டொயோட்டா வெல்ஃபயர், லெக்சஸ் LM மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    • புதிய V-Class மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய V-Class மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஆடம்பர எம்.பி.வி. மாடல் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சந்தையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது. முற்றிலும் புதிய V-Class மாடலின் ஆரம்ப விலை ரூ. 1.4 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் லெக்சஸ் LM மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    புதிய V-Class மாடல் நான்கு மற்றும் ஆறு இருக்கைகள் என இருவித இருக்கை தேர்வுகளுடன் கிடைக்கிறது. இந்த மாடல் பின்புற இருக்கைகள் அதிக சவுகரியத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த காரில் உள்ள லவுஞ்ச் இருக்கைகளில் ரிக்லைன், மசாஜ், வென்டிலேஷன் மற்றும் ஹீட்டிங் வசதிகளுடன் வருகிறது.

    ஆறு இருக்கைகள் கொண்ட மாடலில் மூன்றாம் வரிசை இருக்கைகளிலும் ெவன்டிலேஷன் வசதி வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த காரில் 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், 64-நிறங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங், 2 இன்டீரியர் தீம்கள் மற்றும் இரட்டை 12.3 இன்ச் ஸ்கிரீன்கள் வழங்கப்படுகின்றன.

    பாதுகாப்பிற்கு முற்றிலும் புதிய V-Class மாடலில் ஏழு ஏர்பேக், 360-டிகிரி கேமரா, லெவல் 2 ADAS சூட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எம்.பி.வி. மாடல் அளவில் 5.3 மீட்டர்கள் நீளமும், 3.4 மீட்டரில் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.-கள், பவர்டு ஸ்லைடிங் கதவுகள் மற்றும் ஸ்ப்லிட் டெயில் கேட் வழங்கப்பட்டுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் V-Class மாடல் ராக் க்ரிஸ்டல் வைட், அப்சிடியன் பிளாக், சோடலைட் புளூ, ஆல்பைன் கிரே மற்றும் ஹை-டெக் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. புதிய V-Class மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் உள்ள V300 பெட்ரோல் யூனிட் 248 ஹெச்.பி. பவர், V300d டீசல் யூனிட் 233 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இரு என்ஜின்களுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×