என் மலர்
பைக்

சத்தமின்றி வந்த புது அப்டேட்... வேற மாதிரி மாறிய யெஸ்டி ரோட்ஸ்டர்..!
ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரோட்ஸ்டர் மாடலை சத்தமின்றி அப்டேட் செய்தது. அதன்படி ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் புது நிறத்தில் விற்பனை வந்தது. ரெட் வுல்ஃப் (Red Wolf) என அழைக்கப்படும் புதிய நிற வேரியண்ட் விலை ரூ. 2 லட்சத்து 09 ஆயிரத்து 550 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யெஸ்டி ரோட்ஸ்டர் முற்றிலும் புதிய ரெட் வுல்ஃப் நிற வேரியண்ட் நாடு முழுக்க அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
புதிய வேரியண்ட் ரெட் நிறத்துடன் க்ரோம் டீடெயிலிங்கை சேர்த்து வழங்குகிறது. தோற்றம் தவிர இந்த மோட்டார்சைக்கிளின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த வேரியண்டிலும் மற்ற ரோட்ஸ்டர் மாடல்களில் உள்ள என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் பாகங்கள் தான் வழங்கப்பட்டுள்ளது.
ரெட் வுல்ஃப் நிற ரோட்ஸ்டர் மாடலின் எக்சாஸ்ட், என்ஜின் மற்றும் ஹேன்டில் பார் உள்ளிட்ட பாகங்களில் க்ரோம் ஃபினிஷ் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிரவுன் நிற இருக்கை, பாபர் ஸ்டைல் ரியர் பகுதி, அகலமான பின்புற ஃபென்டர் மற்றும் மாட்யுலர் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன் மற்றும் பாடி தோற்றம் அதன் ஸ்டான்டர்டு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிளின் புதிய நிற வேரியண்டிலும் 350சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 12.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபியூவல் டேன்க் உள்ளது. பைக்கின் மொத்த எடை 194 கிலோ ஆகும்.
பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 320 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 240 மில்லிமீட்டர் ரியர் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது. ரோட்ஸ்டர் பைக்கின் முன்புறம் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் டுவின் ரியர் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் இருக்கை உயரம் 795 மில்லிமீட்டரிலும், கிரவுண்ட் க்ளியரன்ஸ் 171 மில்லிமீட்டரிலும் உள்ளது.






