என் மலர்
செய்திகள்
X
கோவை கோர்ட்டு வளாகத்தில் மாவோயிஸ்டுகள் கோஷம்
Byமாலை மலர்26 Sept 2018 4:58 PM IST (Updated: 26 Sept 2018 4:58 PM IST)
வழக்கு விசாரணை தொடர்பாக கோவை கோர்ட்டில் ஆஜராக வந்தபோது இந்துத்வாவை வேரறுப்போம் என மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை:
கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் ரூபேஷ், அவரது மனைவி சைனா, வீரமணி, கண்ணன், அனுப் ஆகியோர் மீதான வழக்கு கோவை முதன்மை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நaடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக ரூபேஷ் திருச்சூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். வீரமணி, கண்ணன், அனுப் ஆகியோர் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
சைனா ஜாமீனில் வெளியே இருப்பதால் அவர் கோர்ட்டுக்கு வந்தார். விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி சக்திவேல் ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ரூபேஷ் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.
மாவோயிஸ்டுகள் 5 பேரும் தங்கள் வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதால் ரூபேஷ் மனு மீதான விசாரணையையும் நீதிபதி ஒத்திவைப்பதாக கூறினார்.
கோர்ட்டில் ஆஜராக அழைத்து வந்த போது மாவோயிஸ்டுகள் வீரமணி, கண்ணன், அனுப் ஆகியோர் கோஷம் எழுப்பினார்கள். இந்துத்வாவை வேரறுப்போம் என கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.
Next Story
×
X