சர்ச்சைகளுக்கு மத்தியில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதி பள்ளிவாசலிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை
சர்ச்சைகளுக்கு மத்தியில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Published on

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து ஒரு பெரும் அரசியலே தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

அதிலும் சமீபத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். ஜிவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு இன்னும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. அவரை இம்பீச்மெண்ட் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதமும் வழங்கியுள்ளனர். 

இப்படி ஒரு பெரும் சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், இதனை இன்னும் பரபரப்பாக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை தொடர்ந்து சிக்கந்தர் தர்காவில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். மேலும் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதி பள்ளிவாசலிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com