கனமழை காரணமாக மூடப்பட்ட சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் (Consular Appointments) ரத்து செய்யப்பட்டது.
கனமழை காரணமாக மூடப்பட்ட சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு
Published on

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்தது. இதனையொட்டி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் நேற்றைய தினம் திட்டமிடப்பட்ட அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் (Consular Appointments) ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று ரத்து செய்யப்பட்ட அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக சேவை சந்திப்புகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் விசா விண்ணப்ப மையத்தை (VAC) தொடர்பு கொள்ளவும் என்றும் support-india@usvisascheduling.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com