என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cricketer"

    • ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
    • ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியாவுடன் அரை இறுதியில் வருகிற 30-ந் தேதி விளையாடுகிறது.

    மும்பை:

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இலங்கையில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன.

    நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகியஅணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன.

    கடந்த 25-ந்தேதி ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்தூரில் விளையாடின.

    இந்தூருக்கு சென்ற ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் கடந்த 23-ந்தேதி (வியாழக்கிழமை)ரேடிசன் புளூ ஓட்டலில் இருந்து ஜாகிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது தேனீர் விடுதிக்குச் செல்ல கஜ்ரானா சாலையில் நடந்து சென்ற போது, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களிடம் தவறான செயலில் ஈடுபட்டு பாலியல் அத்துமீறல் செய்து உள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

    ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியாவுடன் அரை இறுதியில் வருகிற 30-ந் தேதி விளையாடுகிறது. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் மானபங்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நவிமும்பையில் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    வீராங்கனைகள் தங்கும் ஓட்டல், அவர்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் செல்லும் இடங்களுக்கு போலீசார் பாதுகாப்பை வழங்கி வருகிறார்கள்.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • சிக்சர் அடித்த வீரர் தனது சக வீரரிடம் பேசத் தொடங்கினார்.
    • திடீரென்று வீரர் தரையில் மயங்கி விழுந்தார்.

    கிரிக்கெட் விளையாடும் போதும், நடன ஆடும் போதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    அந்த வகையில் ஒரு உள்ளூர் போட்டியில் கிரிக்கெட் விளையாடும் போது சிக்சர் அடித்த வீரர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிக்சர் அடித்த வீரர் தனது சக வீரரிடம் பேசத் தொடங்கினார். அப்போது திடீரென்று வீரர் தரையில் மயங்கி விழுந்தார். அங்கிருந்த வீரர்கள் உடனடியாக அவரை எழுப்ப முயன்று தண்ணீர் கொடுத்தனர். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. மைதானத்திலேயே அவருக்கு CPR கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு, வீரருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சில வினாடிகளுக்கு முன்பு சிக்சர் அடித்து அனைவரின் இதயங்களையும் வென்ற வீரர் இப்போது இந்த உலகில் இல்லை என்பதை மக்களால் நம்பவே முடியவில்லை.

    விளையாட்டுகளைத் தொடங்குவதற்கு முன் மருத்துவ பரிசோதனை மற்றும் உடற்தகுதி குறித்து கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்பதை இதுபோன்ற விபத்துகள் நமக்குக் கற்பிக்கின்றன.

    • பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான்.
    • 107 டிகிரி வெப்பநிலையில் விளையாடியதால் இந்த இறப்பு எற்பட்டதாக கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான் ஆவார். அவர் சர்வதேச அளவில் விளையாடாத இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்தார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென மைதானத்திலேயே ஜூனைத் மயங்கி விழுந்தார்.

    உடனே மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி வழங்கினர். ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த போட்டிக்கு முன்னதாக அவர் ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு இருந்து வந்துள்ளார். 107 டிகிரி வெப்பநிலையில் விளையாடியதால் இந்த இறப்பு எற்பட்டதாக கூறப்படுகிறது.

    • டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்
    • மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்

    சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 51 - வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு கிரிக்கெட் உலக வீரர்கள்,மற்றும் நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    டெண்டுல்கர் 24- 4- 1973-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். டெண்டுல்கருக்கு தற்போது 51 வயதாகிறது. கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சின் அழைக்கப்படுகிறார்.சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் வருமாறு :-




    டெண்டுல்கர் 11 வயதில் கிரிக்கெட் விளையாட்டில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவரது மூத்த சகோதரர் அஜித் டெண்டுல்கர் அவரை ஊக்குவித்தார்.

    1988 -ல், 15 வயதில் சச்சின் டெண்டுல்கர், குஜராத்திற்கு எதிராக ரஞ்சி டிராபி ஆட்டத்தில் பம்பாய்க்காக முதல் தடவையாக கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் சதம் அடித்த அவர், முதல்தர போட்டியில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.




    ரஞ்சி டிராபி, இரானி டிராபி மற்றும் தியோதர் டிராபி ஆகிய 3 உள்நாட்டுப் போட்டிகளிலும் அறிமுகத்திலேயே சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் இவர்.

    டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். அவர் 664 போட்டிகளில் ஆடியுள்ளார்.

    மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் தான். 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது இணையற்ற பேட்டிங் நுட்பங்களால் கிரிக்கெட் உலகில் ஜொலித்தார்.



    இவரது சாதனைகளுக்காக இந்திய அரசு டெண்டுல்கருக்கு பல விளையாட்டு விருதுகளை வழங்கி கவுரவித்தது. 1994 -ல் அர்ஜுனா விருது, 1997 -ல் கேல் ரத்னா விருது, 1998 -ல் பத்மஸ்ரீ, 2008 -ல் பத்ம விபூஷன் ,2013 -ல் பாரத ரத்னா விருதுகளை பெற்றுள்ளார்.

    • தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.
    • கிப்ஸ் பற்றி விராட் கோலி பேசிய அந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    2008 ஆம் ஆண்டு 19 வயதிற்குப்பட்டோருக்கான உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.

    அப்போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.

    கிப்ஸ் பற்றி விராட் கோலி பேசிய அந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த வீடியோ குறித்து தென்னாபிரிக்க வீரர் கிப்ஸ் இடம் கேள்வி எழுப்பட்டபோது.

    அதற்கு பதில் அளித்த அவர், கோலியின் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பலரும் என்னை டேக் செய்கிறார்கள். அப்போது தன அந்த வீடியோவை நான் பார்த்தேன். எனக்கு அது இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். சர்வதேச கிரிக்கெட்டில் அவருடைய சிறப்பான விளையாட்டால் அவருக்கு சிறப்பான மரியாதையை கிடைத்துள்ளது.

    குறிப்பாக ஒருநாள் கிரிக்கெ போட்டியின் சேஸிங்கில் ரன்களை துரத்தி வெற்றி பெறுவதில் அவர் காட்டும் உத்வேகம் தான் மற்ற வீரர்களை விட கோலியை தனித்துவமானவராக காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

    • முதலில் பேட்டிங் செய்த எம்.பி. டைகர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது.
    • உபி பிரிஜ் ஸ்டார்ஸ் அணி 168 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    பிக் கிரிக்கெட் லீக் 2024 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று உபி பிரிஜ் ஸ்டார்ஸ் மற்றும் எம்.பி. டைகர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

    அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எம்.பி. டைகர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய உபி பிரிஜ் ஸ்டார்ஸ் அணி 168 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இப்போட்டியில் எம்.பி. டைகர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பவன் நேகி வீசிய ஒரு பந்தில் உபி பிரிஜ் ஸ்டார்ஸ் வீரர் சிராக் காந்தி கிளீன் போல்டானார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்டம்பின் மேல் இருந்த பைல்ஸ் கீழே விழவில்லை. இதனால் அவர் நூலிழையில் ஆட்டமிழக்காமல் தப்பித்ததார்.

    இந்த சம்பவம் நடந்தபோது சிராக் காந்தி 98* (52) ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.

    டுவிட்டர் பதிவில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானையும், தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் சில அரசியல்வாதிகளை டேக் செய்து குறிப்பிட்டிள்ளார்.
    பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹாசீப், பாகிஸ்தானில் சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி டுவிட்டரில் காட்டமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முகமது ஹாசீப், "லாகூரில் உள்ள எந்த பெட்ரோல் நிலையத்திலும் பெட்ரோல் கிடைக்கவில்யைா ? ஏடிஎம் இயந்திரங்களில் பணமில்லையா? ஒரு சாமானியர் ஏன் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், இந்த பதிவில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானையும், தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் சில அரசியல்வாதிகளை டேக் செய்து குறிப்பிட்டிள்ளார்.

    இதையும் படியுங்கள்..  'குரங்கு காய்ச்சல்' கொரோனா போல பெருந்தொற்றாக பரவுமா?
    ×