என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boy Baby"

    • ஷர்துல் தாகூர் வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேலையாடவுள்ளார்.
    • ஷர்துல் தாகூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியது.

    இந்திய கிரிக்கெட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவிக்கும் ஷர்துல் தாகூர் வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேலையாடவுள்ளார்.

    ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக லக்னோ வீரர் ஷர்துல் தாகூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியது.

    ஷர்துல் தாகூர் 2022 ஆண்டு தன் நீண்ட நாள் காதலியான மிதாலியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஷர்துல் தாகூர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அறிவித்துள்ளார். இதனையடுத்து பலரும் வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • அரசு மருத்துவமனை நோக்கி செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது.

     திருப்பூர் :

    திருப்பூர், அவிநாசி ரோடு எஸ்.ஏ.பி., தியேட்டர் பஸ் நிறுத்தம் அடுத்துள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி கனகா ( வயது 32). கர்ப்பிணியான இவருக்கு நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து கணவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டார்.

    குமார்நகரில் இருந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ், கனகாவை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனை நோக்கி செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது.

    இதனையடுத்து டெக்னீசியன், டிரைவர் குறளரசன் பிரசவம் பார்த்தனர். வழியிலேயே ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    ×