என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fighter aircraft"

    • சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.
    • MiG-21 இடத்தை தேஜஸ் விமானம் நிரப்பும் என்பதை குறிக்கும் வகையில் இது அமைந்தது.

    60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப்படையில் பெரும்பங்காற்றிய MiG-21 போர் விமானங்கள் இன்று விடைபெற்றன.

    விமானப்படையில் இரண்டு படைப்பிரிவுகளில் 36 MiG-21 விமானங்கள் சேவையில் இருந்து வந்தன.

    இந்நிலையில் இன்று (செப்டம்பர் 26) சண்டிகரில் நடைபெற்ற பிரியாவிடை விழாவில் இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

    விமான படைத் தளத்தில் நடந்த விழாவில் புதிய தேஜஸ் போர் விமானங்கள் உடன் MiG-21 விமானம் வானில் சாகசம் நிகழ்த்தியது. MiG-21 இடத்தை தேஜஸ் விமானம் நிரப்பும் என்பதை குறிக்கும் வகையில் இது அமைந்தது.

    இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், விம்மன படை தளபதி ஏபி சிங் மற்றும் பிற படைத் தளபதிகள் கலந்துகொண்டனர். விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் கலந்துகொண்டார். 

    சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.

    இது 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.

    தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000க்கும் மேற்பட்ட MiG-21 விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

     MiG-21

    1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போர்கள், 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் மற்றும் 2019 ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதல் ஆகியவற்றில் MiG-21 விமானம் முக்கிய பங்காற்றியது.

    இருப்பினும், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் MiG-21 விமானத்திற்கு பாதகமாக அமைந்தது.

    62 ஆண்டுகளில் MiG-21 சந்தித்த 400 விபத்துகளில் 200 விமானிகள் மற்றும் 60 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் அதிக பராமரிப்பு தேவைபடுவதால் MiG-21 கைவிடப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றுக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பான Tejas Mk2 விமானங்கள் இருக்கும். 

    • MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
    • விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் MiG-21 விமானத்தை ஓட்டினார்.

    60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப்படையில் பெரும்பங்காற்றிய MiG-21 போர் விமானங்கள் விடைபெற உள்ளன.

    விமானப்படையில் தற்போது இரண்டு படைப்பிரிவுகளில் 36 MiG-21 விமானங்கள் உள்ளன. செப்டம்பர் 26 ஆம் தேதி சண்டிகரில் நடைபெறும் விழாவில் இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும். 

    நேற்று ராஜாஸ்தானின் பிகானரில் உள்ள நல் விமானப்படை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பிரியாவிடை விழாவில் விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் MiG-21 விமானத்தை ஓட்டினார்.

    சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.

    இது 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.

    தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000க்கும் மேற்பட்ட MiG-21 விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    MiG-21

     

    1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போர்கள், 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் மற்றும் 2019 ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதல் ஆகியவற்றில் MiG-21 விமானம் முக்கிய பங்காற்றியது.

    இருப்பினும், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் MiG-21 விமானத்திற்கு பாதகமாக அமைந்தது.

    62 ஆண்டுகளில் MiG-21 சந்தித்த 400 விபத்துகளில் 200 விமானிகள் மற்றும் 60 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் அதிக பராமரிப்பு தேவைபடுவதால் MiG-21 கைவிடப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றுக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பான Tejas Mk2 விமானங்கள் இருக்கும். 

    • போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கடந்த ஜூன் 14 திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கியது.
    • இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும்.

    தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம், 38 நாட்களுக்குப் பிறகு இறுதியாக நாடு திரும்பியது.

    போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கடந்த ஜூன் 14 திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு இன்று இங்கிலாந்துக்கு புறப்பட்டது.

    இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும். இதன் விலை சுமார் 110 மில்லியன் டாலர். இந்தியாவுடன் இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்ற இந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவுடன் வந்தாலும், பழுதுபார்க்கும் பணியை முடிக்க முடியவில்லை. இதன் விளைவாக, 25 பிரிட்டிஷ் பொறியாளர்கள் கொண்ட குழு இந்த மாதம் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு வந்தது.

    இறுதியாக, ஏர் இந்தியா பராமரிப்பு ஹேங்கரில் வைத்து பழுதுபார்ப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

    • இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும். இதன் விலை சுமார் 110 மில்லியன் டாலர்.
    • 25 பிரிட்டிஷ் பொறியாளர்கள் கொண்ட குழு இந்த மாதம் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு வந்தது.

    தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம், 37 நாட்களுக்குப் பிறகு இறுதியாக நாடு திரும்புகிறது.

    பழுதுபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில் விமானம் ஹேங்கரில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, (இன்று) செவ்வாய்க்கிழமை இங்கிலாந்துக்கு புறப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும். இதன் விலை சுமார் 110 மில்லியன் டாலர். இந்தியாவுடன் இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்ற இந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவுடன் வந்தாலும், பழுதுபார்க்கும் பணியை முடிக்க முடியவில்லை. இதன் விளைவாக, 25 பிரிட்டிஷ் பொறியாளர்கள் கொண்ட குழு இந்த மாதம் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு வந்தது.

    இறுதியாக, ஏர் இந்தியா பராமரிப்பு ஹேங்கரில் வைத்து பழுதுபார்ப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. 

    • C-17 குளோப்மாஸ்டர் எனப்படும் பெரிய போக்குவரத்து விமானத்தில் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படும்.
    • இருப்பினும், F-35 விமானத்தின் இறக்கைகள் சுமார் 11 மீட்டர் என்றாலும், C-17 சரக்கு இருப்பு அகலம் 4 மீட்டர் மட்டுமே.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் கடற்படையின் F-35B போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அதை சரிசெய்ய பிரிட்டனைச் சேர்ந்த 40 பொறியாளர்கள் கொண்ட குழுவின் முயற்சிகள் தோல்வியடைந்தன. இரண்டு வாரங்களாக சிக்கலைத் தீர்க்க முடியாததால், விமானத்தை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்புவதே சிறந்தது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, போர் விமானம் C-17 குளோப்மாஸ்டர் எனப்படும் பெரிய போக்குவரத்து விமானத்தில் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படும்.

    இருப்பினும், F-35 விமானத்தின் இறக்கைகள் சுமார் 11 மீட்டர் என்றாலும், C-17 சரக்கு இருப்பு அகலம் 4 மீட்டர் மட்டுமே. இதனால் விமானத்தை நேரடியாக உள்ளே ஏற்றுவது சாத்தியமில்லை. எனவே, அதன் இறக்கைகளைப் பிரித்து விமானத்தை பாகங்களாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

     ஆனால் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானத்தின் இறக்கைகளைப் பிரிப்பது மிகவும் சிக்கலான செயல்முறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இருப்பினும், இவ்வாறு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில், அமெரிக்காவிலும் தென் கொரியாவிலும் F-35 விமானங்களின் இறக்கைகள் இதேபோன்ற முறையில் அகற்றப்பட்டு வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த செயல்முறை ஒரு சில நாட்களில் முடிக்கப்பட்டு, விமானம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    • எப்.35 ரக விமானம் சம்பவத்தன்று தென் கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது.
    • விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வாஷிங்டன்:

    உலகின் மிகப்பெரிய விமான படையை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இந்த படையில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளது. 80 மில்லியன் டாலர் மதிப்பிலான எப்.35 ரக விமானம் சம்பவத்தன்று தென் கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    திடீரென அந்த விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த போர் விமானம் எங்கே சென்றது என தெரியவில்லை.

    அந்த விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விமானத்தின் நிலை என்ன என்பது மர்மமாக உள்ளது. அந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    நவீனரக போர் விமானம் மாயமான சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவது குறித்து பயிற்சியும் நடக்க உள்ளது.
    • 61 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    சூலூர்:

    இந்திய விமானப்படை சார்பில் தாரங் சக்தி 2024 என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி இந்தியாவில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    முதல் கட்ட பயிற்சி நேற்று முதல் வருகிற 14-ந் தேதி வரை சூலூரிலும், 2-வது கட்ட பயிற்சி செப்டம்பர் 1 முதல் 14-ந் தேதி வரை ஜோத்பூரிலும் நடக்கிறது.

    முதல் கட்ட பயிற்சி நேற்று சூலூர் விமானப்படை தளத்தில் தொடங்கியது. இதில் இந்திய விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி, ஜெர்மனி நாட்டின் விமானப்படை தலைமை தளபதி இங்கோ ஹெர் ஹார்ட்ஸ் மற்றும் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டின் துணை தளபதிகள் பங்கேற்றனர்.

    இதில் 5 நாடுகளை சேர்ந்த 130க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று விமான கூட்டு பயிற்சிக்கு வந்த ஜெர்மனி தலைமை தளபதிக்கு, இந்திய நாட்டின் 5 தேஜஸ் ரக விமானங்கள், பறந்து சென்று வானில் வட்டமடித்தபடி வரவேற்பு அளித்தனர்.

    இன்று 2-வது நாளாக விமான கூட்டு போர் பயிற்சி நடந்தது. இதில் 5 நாடுகளை சேர்ந்த விமானங்களும், ஒரே நேரத்தில், ஒரே கட்டளையின் கீழ், எவ்வாறு ஒருங்கிணைந்து பறப்பது என்பது பற்றி பயிற்சி மேற்கொண்டனர்.

    அதனை தொடர்ந்து, வானில் பறந்தபடி, ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவது குறித்து பயிற்சியும் நடக்க உள்ளது.

    பயிற்சியின் முடிவில் சிறப்பு கண்காட்சியும் நடக்கிறது. இதில் 5 நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்களும் பல்வேறு சாகசங்களில் ஈடுபட உள்ளனர். அத்துடன் விமானப்படைகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன கருவிகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து இந்திய விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறியதாவது:-

    61 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு தொழில்நுட்பங்களை பெற முடியும். நமது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தவும், ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக அமையும். விமானப்படை உள்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் கால்பதித்து வருகிறது. இது பாராட்டத்தக்கது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பெங்களூரு ஹெலகங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெறுகிறது.
    • தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெறும்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 15 ஆவது சர்வதேச விமான கண்காட்சி இன்று முதல் தொடங்கியுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

    பெங்களூருவில் 2 ஆண்டுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு ஹெலகங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெறுகிறது.

    இன்று பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய விமான கண்காட்சி பிப்ரவரி 14-ம் தேதி வரை என 5 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெறும்.

    விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

    விமான கண்காட்சியைக் காண பலரும் ஆர்வமுடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் எப் 35, எஸ்யூ 35 போர் விமானங்களும் எஸ்யூ 57,எப் 16 விமானங்களும் வான்வெளி சாகசங்களில் ஈடுபட உள்ளன.

    கொடைக்கானலில் இன்று வானில் வட்டமடித்த போர் விமானங்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் தற்போது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடந்து வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை கொடைக்கானல் நகர் மற்றும் மேல் மலை கிராமங்களில் விமானம் பறப்பது போன்ற சத்தம் கேட்டது. உடனே காட்டேஜ், விடுதிகளில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகளும் வீடுகளில் இருந்த பொதுமக்களும் வெளியே ஓடி வந்து பார்த்தனர்.



    அப்போது போர் ஒத்திகையில் ஈடுபடும் விமானங்கள் வானில் பறந்து சென்றதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுமார் 20 நிமிடம் கொடைக்கானல் நகரிலும், மலை கிராமங்களிலும் வட்டமடித்த அந்த விமானங்கள் பின்னர் மறைந்தது.

    கொடைக்கானல் மலை கிராமங்களில் நக்சலைட் நடமாட்டம் இருப்பதாக அடிக்கடி போலீஸ் சோதனை நடத்தப்படும். மேலும் இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொடைக்கானலுக்கு வரும் போது ஒருவித பதட்டமான சூழல் உருவாகும்.

    இந்நிலையில் இன்று கொடைக்கானலில் பறந்த போர் விமானங்களால் பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டன. இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது அவர்களும் தங்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை என்றனர். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×