என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சானிடைசர்"

    • திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி தனியாக வீடு எடுத்து லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர்
    • பாதிக்கப்பட்ட பெண் குருகிராமில் பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்துவந்துள்ளார்.

    ஹரியானாவின் குருகிராமில் தன்னுடன்  லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் காதலனே சானிடைசரை ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான பாதிக்கப்பட்ட பெண் திரிபுராவைச் சேர்ந்தவர். இவர் ஹரியானாவின் குருகிராமில் பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்துவந்துள்ளார்.

    இதனிடையே சிவம் என்ற இளைஞருடன் ஆன்லைன் டேட்டிங் செயலி ஒன்றின்மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவம் டெல்லியின் நரேலாவைச் சேர்ந்தவர். இந்த பழக்கம் தொடர நாளடைவில் இருவரும் செல்ஃபோன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசிவந்துள்ளனர். இதனையடுத்து திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி குருகிராமில் இருவரும் தனியாக வீடு எடுத்து லிவ்-இன் உறவில் இருந்துவந்துள்ளனர்.

    இந்நிலையில் பிப்.16 அன்று இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சிவம் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கி, அந்தரங்க உறுப்பில் சானிடைசரை ஊற்றி தீவைத்துள்ளார். மேலும் இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது அம்மாவிற்கு ஃபோன் செய்து தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டார். 

    இதனையடுத்து போலீசார் 19 வயது இளைஞர் சிவமை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது கைதான சிவம் மீது 115 (2) (நோக்கத்துடன் காயப்படுத்துதல்), 118 (1) (ஆபத்தான ஆயுதம் கொண்டு தாக்குதல்), 127 (7) (சிறைவைத்தல்), 69 (திருமணம் என்ற பெயரில் உடலுறவு வைத்து கொள்ளுதல்), 351 (2)(மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையை பொறுத்து தேவை என்றால் கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும்" என்றும் தெரிவித்துள்ளனர். 

    • நேற்றிரவு மது அருந்தியுள்ளனர். கையில் சானிடைசர் வைத்திருந்ததாக தகவல்
    • இன்று காலை காவிரி படித்துறையில் இறந்த நிலையில் உடல் மீட்பு

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பெருமாண்டி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது 50). கும்பகோணம் கர்ண கொல்லை கீழத் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (40). இவர்கள் இருவரும் நண்பர்கள். கூலி வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கும்பகோணம் சுவாமிமலை செல்லும் வழியில் சக்கரப்படித்துறை அருகே பாலகுரு, சவுந்தர்ராஜன் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

    இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, பாலகுரு, சவுந்தர்ராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவரும் நண்பர்கள் என்பதால் கடந்த சில நாட்களாக கை கழுவும் சானிடைஷர் பொருட்களை வைத்து கொண்டு சுற்றி திரிந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாக போதைக்காக மதுவில் சானிடைஷர் கலந்து குடித்தபோது அதன் வீரியம் அதிகரித்து இருவரும் இறந்திருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இருந்தாலும் சம்பவ இடத்தில் சானிடைசர் போன்ற பொருட்கள் எதுவும் தென்படவில்லை.

    மதுவில் போதை அதிகமாவதற்காக சானிடைசர் போன்ற பொருட்கள் கலந்து குடித்து இறந்தனரா? அல்லது வேறு போதை மாத்திரை எதுவும் காரணமா? என்று தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இருவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 4 பேரும் கும்பகோணம் காவேரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் அமர்ந்து மது குடித்தனர்.
    • ஜெயகிருஷ்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது 48). கும்பகோணம் கருணைகொல்லை தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(43). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் (45), ஜெயகிருஷ்ணா (49). இவர்கள் 4 பேரும் கூலி தொழிலாளிகள்.

    நேற்று முன்தினம் இரவு 4 பேரும் கும்பகோணம் காவேரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது போதை குறைவாக இருந்ததால் மதுவில் சானிடைசர் மற்றும் போதை மாத்திரைகளை கலந்து குடித்தனர். இதில் வீரியம் அதிகமாகி பாலகுரு, சவுந்தரராஜன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து இறந்தனர்.

    மேலும் அவர்களுடன் மது அருந்திய முருகன், ஜெயகிருஷ்ணா கதி என்ன ஆனது என்று போலீசார் விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே சம்பவம் நடந்த அன்று முருகன், ஜெயகிருஷ்ணா ஆகியோர் போதையில் தள்ளாடியபடி சென்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகே சாலையோரம் சுருண்டு விழுந்து கிடந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனே அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று முருகன் இறந்தார். ஜெயகிருஷ்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவர் கண் முழித்தால் தான் நடந்த முழு விவரங்கள் தெரியும் என்று போலீசார் கூறினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் ரத்தக்கறையும் இருந்ததால் அது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுவில் சானிடைசர் கலந்து குடித்து 2 பேர் நேற்று பலியான நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×