லிவ்-இன் உறவில் கொடூரம்... பெண்ணின் அந்தரங்க உறுப்பில் சானிடைசர் ஊற்றி தீவைத்த காதலன்

திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி தனியாக வீடு எடுத்து லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர்பாதிக்கப்பட்ட பெண் குருகிராமில் பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்துவந்துள்ளார்.
லிவ்-இன் உறவில் கொடூரம்... பெண்ணின் அந்தரங்க உறுப்பில் சானிடைசர் ஊற்றி தீவைத்த காதலன்
Published on

ஹரியானாவின் குருகிராமில் தன்னுடன்  லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் காதலனே சானிடைசரை ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான பாதிக்கப்பட்ட பெண் திரிபுராவைச் சேர்ந்தவர். இவர் ஹரியானாவின் குருகிராமில் பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்துவந்துள்ளார்.

இதனிடையே சிவம் என்ற இளைஞருடன் ஆன்லைன் டேட்டிங் செயலி ஒன்றின்மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவம் டெல்லியின் நரேலாவைச் சேர்ந்தவர். இந்த பழக்கம் தொடர நாளடைவில் இருவரும் செல்ஃபோன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசிவந்துள்ளனர். இதனையடுத்து திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி குருகிராமில் இருவரும் தனியாக வீடு எடுத்து லிவ்-இன் உறவில் இருந்துவந்துள்ளனர்.

இந்நிலையில் பிப்.16 அன்று இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சிவம் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கி, அந்தரங்க உறுப்பில் சானிடைசரை ஊற்றி தீவைத்துள்ளார். மேலும் இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது அம்மாவிற்கு ஃபோன் செய்து தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டார். 

இதனையடுத்து போலீசார் 19 வயது இளைஞர் சிவமை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது கைதான சிவம் மீது 115 (2) (நோக்கத்துடன் காயப்படுத்துதல்), 118 (1) (ஆபத்தான ஆயுதம் கொண்டு தாக்குதல்), 127 (7) (சிறைவைத்தல்), 69 (திருமணம் என்ற பெயரில் உடலுறவு வைத்து கொள்ளுதல்), 351 (2)(மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையை பொறுத்து தேவை என்றால் கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும்" என்றும் தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com