search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட புதிய போட் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!
    X

    ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட புதிய போட் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!

    • போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் உடல் ஆரோக்கியத்துக்கான சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    போட் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. வேவ் சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் போட் வேவ் எலெக்ட்ரா என அழைக்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ் கலர்ஃபிட் லூப், அமேஸ்ஃபிட் பாப் 2 மற்றும் சில ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    புதிய போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் சதுரங்க வடிவம் கொண்ட டயல், 1.81 இன்ச் டிஸ்ப்ளே, HD ரெசல்யூஷன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், IP 68 தர டஸ்ட், ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. பிரீமியம் அலுமினியம் அலாய் டிசைன் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் உள்ளது.

    இத்துடன் ஆக்டிவிட்டி டிராக்கர், பிரீதிங் டிரெயினிங், ஹைட்ரேஷன் அலர்ட், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் வசதி கொண்டிருக்கிறது. பயனர்கள் இதில் அதிகபட்சமாக 50 காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து எளிமையாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    இவை தவிர மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல், வானிலை விவரங்கள், ஃபைண்ட் மை போன் போன்ற வசதிகள் உள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் கிடைக்கும். ப்ளூடூத் பயன்படுத்தும் பட்சத்தில் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ மற்றும் பின்க் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை டிசம்பர் 24 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது.

    Next Story
    ×