search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ப்ளூடூத் காலிங் வசதியுடன் குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்
    X

    ப்ளூடூத் காலிங் வசதியுடன் குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

    • போட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
    • புது ஸ்மார்ட்வாட்ச் அளவில் பெரிய டிஸ்ப்ளே, ஏராளமான உடல்நல அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்வதில் முன்னணி பிராண்டாக விளங்கும் போட், "வேவ் அல்டிமா" பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச் அளவில் பெரிய, கிராக் ரெசிஸ்டண்ட் கர்வ் ஆர்க் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதுதவிர ஏராளமான ஆரோக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச்-இல் 1.8 இன்ச், 500 நிட் சூப்பர் பிரைட், எட்ஜ்-டு-எட்ஜ் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, குறைந்த எடை கொண்ட அலுமினியம் அலாய் டயல், சருமத்திற்கு மென்மையான உணர்வை தரும் சிலிகான் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ரேஜிங் ரெட், ஆக்டிவ் பிளாக் மற்றும் டியல் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கின்றன.

    புதிய வேவ் அல்டிமா மாடலில் ப்ளூடூத் காலிங் வசதி, பில்ட்-இன் HD ஸ்பீக்கர், மைக்ரோபோன், ப்ளூடூத் 5.3 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள மைக்ரோபோன் அதிக சத்தமுள்ள பகுதிகளில் உங்களுக்கு உதவும். மேலும் இதில் ஏராளமான சென்சார்கள், மாணிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை உடல் நலனை பாதுகாக்க உதவுகிறது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் லைப்ஸ்டைல் வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×