புதிய மேக் மாடல் ரிலீசுக்கு தேதி குறித்த ஆப்பிள்

ஆப்பிள் நிகழ்வுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்நிகழ்வில் குறைந்த விலை மேக்புக் மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.
புதிய மேக் மாடல் ரிலீசுக்கு தேதி குறித்த ஆப்பிள்
Published on

ஆப்பிள் நிறுவனம் வருகிற மார்ச் மாதம் 4ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெற இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்வில் வைத்து ஆப்பிள் நிறுவனம் புதிய மேக், ஐபேட் மற்றும் ஐபோன் சார்ந்த அப்டேட்களை வழங்கும் என்று தெரிகிறது. ஆப்பிள் எக்ஸ்பீரியன்ஸ் நிகழ்வு மார்ச் 4ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஆப்பிள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான அழைப்பிதழில் சாதனங்கள் பற்றிய விவரங்களோ அல்லது நேரலையை உறுதிப்படுத்தும் விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் மாடலை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்வதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் புதிய மேக்புக் மாடல், M5 சிப்செட் கொண்ட மேக்புக் ஏர், M5 ப்ரோ மற்றும் M5 மேக்ஸ் பிராசஸர்கள் கொண்ட மேக்புக் ப்ரோ மாடல்கள், புதிய மேக் டிஸ்ப்ளேக்கள், ஐபோன் 17e, A18 சிப்செட் கொண்ட ஐபேட் மாடல், M4 சிப்செட் உடன் மேம்பட்ட ஐபேட் ஏர் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com