search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    2006ல் அமெரிக்காவில் துவங்கப்பட்ட டுவிட்டர் நிறுவனத்தை கடந்த 2022 அக்டோபர் மாதம், உலகின் நம்பர் 1. கோடீசுவரரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், சுமார் ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) விலைக்கு வாங்கினார்.

    மின்வாரிய முதன்மை என்ஜினீயர் அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பணியாற்றும்போது விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜாமின் வழங்க கோரி சந்திரபாபு நாயுடு ஆந்திரா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட் அவருக்கு 4 வாரம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    இளைஞர்களின் திடீர் மரணத்துக்கு கொரோனா ஊசி காரணமல்ல என்று இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.

    ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பாட்காஸ்டின் 3வது ஆடியோ இன்று வெளியானது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தி.மு.க.வின் முக்கிய கொள்கைகளில் ஒன்று மாநில சுயாட்சி. மாநிலங்களை ஒழிக்கவேண்டும் என பா.ஜ.க. அரசு நினைக்கிறது. மாநில சுயாட்சி கொள்கை வெல்லும் வகையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். இந்தியாவை இந்தியா கூட்டணியிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர், வீராங்கனைக்கு ஆண்டுதோறும் பிபா வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்தார். பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருதை உலக கோப்பை வென்ற ஸ்பெயின் வீராங்கனை அடானா பொன்மதி கைப்பற்றியுள்ளார்.

    தலைநகர் டெல் அவிவில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேசுகையில், ஹமாசால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை நிபந்தனை இன்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். போர்நிறுத்தத்திற்கான அழைப்புகள் இஸ்ரேலை ஹமாசிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திடம் சரணடைய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அது நிச்சயம் நடக்காது என தெரிவித்தார்.

    "இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில், பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகளை எங்கள் நாட்டு எல்லையில் நிலைநிறுத்தி உதவுமாறு அமெரிக்காவை கோரியுள்ளோம்" என ஜோர்டான் நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முஸ்தஃபா ஹியாரி கூறியுள்ளார்.

    "காசா பகுதி ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது. இஸ்ரேல்-ஹமாஸ் போரில், ஹமாஸை இஸ்ரேல் வெல்ல வேண்டும்" என இஸ்ரேலுக்கான இங்கிலாந்து தூதர் சைமன் வால்டர்ஸ் கருத்து தெரிவித்தார். 

    எதிர்க்கட்சி தலைவர் போல் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

    அரசியல் ஆதாயத்துக்காக ஆரியம், திராவிடம் நாடகத்தை தி.மு.க. நடத்துகிறது என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

    இரண்டு நாட்கள் குஜராத் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ. 5,950 கோடி திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், அடிக்கல்லும் நாட்டுகிறார்.

    ×