என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    "காசா பகுதி ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது. இஸ்ரேல்-ஹமாஸ் போரில், ஹமாஸை இஸ்ரேல் வெல்ல வேண்டும்" என இஸ்ரேலுக்கான இங்கிலாந்து தூதர் சைமன் வால்டர்ஸ் கருத்து தெரிவித்தார். 

    எதிர்க்கட்சி தலைவர் போல் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

    அரசியல் ஆதாயத்துக்காக ஆரியம், திராவிடம் நாடகத்தை தி.மு.க. நடத்துகிறது என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

    இரண்டு நாட்கள் குஜராத் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ. 5,950 கோடி திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், அடிக்கல்லும் நாட்டுகிறார்.

    இஸ்ரேலில் இருந்து வந்த விமானத்தை தரையிறக்க எதிர்ப்பு தெரிவித்து ரஷியாவில் உள்ள விமான நிலையத்தில் ஒரு கும்பல புகுந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், யூதரகள் இருக்கிறார்களா? என பாஸ்போர்ட் மூலம் சோதனை செய்ததால் அச்சம் நிலவியது.

    ஆந்திராவில் இரண்டு ரெயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் குறித்து தகவல் பெற ரெயில்வே துறை சார்பில் 8106053051, 8106053021, 8500041670, 8500041671, 0891 2746330, 0891 2744619, 8300383004 என்ற இலவச உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மனித தவறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக கிழக்கு ரெயில்வே செய்தி பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    "பாலஸ்தீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழையவும், வசிக்கவும் அரபு நாடுகள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீனர்களை பொறுப்பில் எடுத்து கொள்ள தயங்கி, தங்கள் நாடுகளுக்குள் சேர்க்கவும் மறுத்து, இஸ்ரேலை மட்டும் கண்டிக்கும் வழிமுறையையும் அரபு நாடுகள் கைவிட வேண்டும்", என இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து அமெரிக்க குடியரசு கட்சியின் முக்கிய தலைவர் விவேக் ராமசாமி தெரிவித்தார்.

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக துருக்கியில் நடைபெற்ற பேரணியில் எர்டோகன் ஆற்றிய உரையை அடுத்து, துருக்கியில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.

    கேரளாவில் இதுபோன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் மஷால், ஆன்லைன் மூலம் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் காய்ச்சல் முகாம்களை அமைச்சர் மா. மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என ஐ.நா.வும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்த அழைப்பை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது. இந்நிலையில், தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் எனில் இஸ்ரேல் சிறையில் வாடும் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.

    ஹமாசுக்கு எதிரான போரில் அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என ஐ.நா.வும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அந்த அழைப்பை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் குழுவிற்கு எதிரான இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.

    ×