என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "imdb"

    • சமூக பிரச்சினைகளை தொடும் ஸ்கிரிப்ட்கள் என எல்லாமே ரசிகர்களை கவர்ந்தன.
    • இந்த படங்கள் நம் வாழ்க்கையின் உண்மைகளை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்.

    2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்தது. புதிய இயக்குநர்களின் பிரமிப்பூட்டும் கதைகள், அனுபவமிக்க நட்சத்திரங்களின் சிறப்பான நடிப்பு, சமூக பிரச்சினைகளை தொடும் ஸ்கிரிப்ட்கள் என எல்லாமே ரசிகர்களை கவர்ந்தன.

    இந்தாண்டு IMDb-யின் பயனர் லிஸ்ட் அடிப்படையில், உயர் ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் படங்களைப் பார்ப்போம்.

    இந்த படங்கள் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அவை வாழ்க்கையின் உண்மைகளை பிரதிபலிக்கும் கண்ணாடிகள். வாருங்கள், இந்த ஆண்டின் சினிமா ஜெம்ஸ்களை அலசுவோம்!


    1. டூரிஸ்ட் ஃபேமிலி - 8.2

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவெற்பிற் பெற்று வசூலை வாரி குவித்தது.

    இப்படம் உலகளவில் ரூ.90 கோடி ரூபாய்-க்கு அதிகமாக வசூலை குவித்தது.கம்மியான பட்ஜெடில் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மில்லியன் டால்டர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு இப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்துது. மக்களின் அமோக வரவேற்பால் இப்பட்டியலில் இப்படம் முதலிடம் பிடித்துள்ளது.


    2. டிராகன் - 7.8

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.

    லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மொத்தமாக உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது. நல்ல விமர்சங்களை பெற்ற இப்படம் இப்பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.


    3. பைசன் காளமாடன் - 7.8

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது. அணைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டை பெற்ற இப்படம் இப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்துள்ளது.


    4. காந்தா - 7.6

    துல்கர் சல்மான் நடிப்பில் இந்தாண்டு இறுதியில் வெளியான படம் 'காந்தா'. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மிக நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் இப்பட்டியலில் 3 ஆம் டைம் பிடித்துள்ளது.


    5. லெவன் - 7.4

    லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தில் இடம் பெற்ற ஃப்ளாஷ் பேக் போர்ஷன் மற்றும் கிளைமாக்ஸ் டிவிஸ்ட் மக்கள் பலரால் பேசப்பட்டது. ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு இப்படத்தை மக்கள் கொண்டாடி தீர்த்தனர். இதன் காரணமாக இப்படம் இப்பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.


    6. மாரீசன் - 7.4

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ஒரு மறதி நோயாளிக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. ஓடிடி வெளியீட்டில் இப்படத்தை மக்கள் கொண்டாடினர். இதன் காரணமாக இப்படம் இப்பட்டியலில் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.


    7. 3BHK - 7.4

    சித்தார்த் 40-வது திரைப்படமாக வெளியான 3 BHK மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்திருந்தார். இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பம் பற்றிய கதையாகும். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ஓடிடியில் வெளியாகியும் மக்களிடம் பாராட்டை பெற்றது. இதன் காரணமாக இப்பட்டியலில் 7 ஆம் இடம் பிடித்துள்ளது.


    8. குடும்பஸ்தன் - 7.3

    இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தில் சான்வி மேகனா கதாநாயகியாக நடித்திருந்தார்.ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டது.

    வெறும் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.28 கோடி வசூலை குவித்து சிறிய படங்களும் பெரிய வசூலை குவிக்கும் என்று இந்தாண்டு தொடக்கத்தில் எடுத்துக்காட்டியது. இதன் காரணமாக இப்பட்டியலில் 8 ஆம் இடம் பிடித்துள்ளது.


    9. வீர தீர சூரன் - 6.9

    'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் சீயான் விக்ரம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது. நீண்ட நாள் பிறகு ஒரு பக்கா சீயான் ஸ்டைலில் ஒரு கமெர்ஷியல் திரைப்படம் பார்த்த மன நிம்மதி ரசிகர்களுக்கு கிடைத்தது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ஓடிடியில் வெளியாகியும் மக்களிடம் பாராட்டை பெற்றது. இதன் காரணமாக இப்பட்டியலில் 9 ஆம் இடம் பிடித்துள்ளது.


    10. மதராஸி - 6.7

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'மதராஸி'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    உலகம் முழுவதும் வெளியான இப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது. மக்களிடம் பாராட்டை பெற்ற இப்படம் இப்பட்டியலில் இப்படம் 10 ஆம் பிடித்துள்ளது.

    முடிவுரை:

    இந்த படங்கள் 2025-ஐ தமிழ் சினிமாவின் தங்க ஆண்டாக மாற்றின. இந்த படங்களின் கதைகள் புதுமையானவை. IMDb ரேட்டிங்ஸ் அடிப்படையில் இவை தான் டாப். அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    • பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி 2022-ம் ஆண்டின் டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

    பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி 2022-ம் ஆண்டின் டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் யார் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. தங்கள் தளத்தில் யார் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

     

    தனுஷ்

    தனுஷ்

    ஸ்டார் மீட்டர் என எப்போதும் யார் பிரபலமாக இருக்கிறார் என்பதற்கான ரேட்டிங் இவர்கள் தளத்தில் இருக்கும். இந்த டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் பட்டியலில் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை ஆலியா பட்டும், மூன்றாவது இடத்தை ஐஷ்வர்யா ராயும் பெற்றுள்ளனர்.

     

    ஐஎம்டிபி வெளியிட்ட பட்டியல்

    ஐஎம்டிபி வெளியிட்ட பட்டியல்

    மேலும் அந்த பட்டியலில் இடம்பெற்ற பிரபலங்களின் பட்டியல் பின்வருமாறு:

    1. தனுஷ்

    2. ஆலியா பட்

    3. ஐஷ்வர்யா ராய் பச்சன்

    4. ராம் சரண் தேஜா

    5. சமந்தா

    6. ஹிருத்திக் ரோஷன்

    7. கியாரா அத்வானி

    8. ஜூனியர் என்.டி.ஆர்

    9. அல்லு அர்ஜுன்

    10. யஷ்

    • பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி 2022-ம் ஆண்டின் டாப்-10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • இந்த பட்டியலில் தென்னிந்திய சினிமா படங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

    தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் வெளிநாட்டு விருது வாங்குவதிலும் அதிகம் காணப்படுகிறது. தென்னிந்திய சினிமாக்கள் தற்போது இந்திய பொழுதுபோக்கு சந்தையை ஆளுகின்றன. சமீபத்தில், ஐஎம்டிபி 2022 ஆம் ஆண்டின் முதல் 10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது, இதில் ஒரே ஒரு பாலிவுட் படம் மட்டுமே இடம்பெற்று உள்ளது.

    விக்ரம்

     

    எஸ்.எஸ்.ராஜமவுலியின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் படமான 'ஆர்ஆர்ஆர்' முதலிடத்தைப் பிடித்து உள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் பின்வருமாறு:-

    1. ஆர்.ஆர்.ஆர்

    2. தி காஷ்மீர் பைல்ஸ்

    3. கே.ஜி.எப்-2

    4. விக்ரம்

    5. காந்தார

    6. ராக்கெட்ரி: நம்பி விளைவு

    7. மேஜர்

    8. சீதா ராமம்

    9. பொன்னியின் செல்வன்: பாகம் ஒன்று

    10. 777 சார்லி

    ஆர்ஆர்ஆர் படம் மார்ச் மாத தொடக்கத்தில் ஐந்து மொழிகளில் வெளியானது, முக்கியமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி. ஆர்ஆர்ஆர் கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரைகளையும் பெற்று உள்ளது. 'தி காஷ்மீர் பைல்ஸ்' விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இப்படத்தில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறுவதை படம் காட்டுகிறது.

    • ’பொன்னியின் செல்வன் -1’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

    மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.


    ஐ.எம்.டி.பி. போஸ்டர்

    மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஐ.எம்.டி.பி.யின் மிகவும் பிரபலமான 10 இந்திய திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதனை படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

     

    • எனக்கு அடுத்தவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது.
    • இனிமேல் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைப்பேன்.

    நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி சிகிச்சை பெற்றார். இதனால் சினிமாவை விட்டும் சில மாதங்கள் ஒதுங்கியும் இருந்தார். சிகிச்சைக்கு பின் உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

    இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு அடுத்தவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. எல்லா துறைகளில் இருப்பவர்களும் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சகஜம். நானும் அப்படித்தான்.

    மற்றவர்களின் வெற்றிகளை பார்த்து நாமும் அவர்களைப்போல் முன்னேற கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 'ஐஎம்டிபி'யின் 100 பிரபலங்கள் பட்டியலில் எனக்கு 13-வது இடம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    எனக்கு நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. இனிமேல் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைப்பேன்''என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தி நடிகர் ஷாரூக் கான் முதலிடம் பிடித்து இருந்தார்.
    • ஐந்தாவது இடத்தில் ஷோபிதா துலிபலா உள்ளார்.

    தி இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் (IMDb) 2024 ஆண்டுக்கான பிரபல இந்திய நட்சத்திரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல்வேறு புதுமுக நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் ஷாரூக் கான் முதலிடம் பிடித்து இருந்தார்.

    இந்த நிலையில், 2024 ஆண்டுக்கான பிரபல நட்சத்திரங்கள் பட்டியலில் ஷாருக் கான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் திரிப்தி திம்ரி முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோண், மூன்றாவது இடத்தில் இஷான் காட்டர், ஐந்தாவது இடத்தில் ஷோபிதா துலிபலா உள்ளனர்.

    இவர்களைத் தொடர்ந்து ஷர்வாரி ஆறாவது இடத்திலும், ஐஸ்வர்யா ராய் ஏழாவது இடத்திலும், எட்டாவது இடத்தில் சமந்தா, ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் முறையே அலியா பட் மற்றும் பிரபாஸ் ஆகியோர் உள்ளனர்.

    இந்திப் பட உலகில் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் உள்ளிட்ட பலரை பின்னுக்கு தள்ளி தீபிகா படுகோனே சாதனை படைத்துள்ளார். #DeepikaPadukone
    பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி 2018-ம் ஆண்டின் டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் யார் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. தங்கள் தளத்தில் யார் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    ஸ்டார் மீட்டர் என எப்போதும் யார் பிரபலமாக இருக்கிறார் என்பதற்கான ரேட்டிங் இவர்கள் தளத்தில் இருக்கும். இந்த டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் பட்டியலில் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக இந்தி முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என அனைத்து முக்கிய நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி நடிகை தீபிகாபடுகோனே முதல் இடம் பிடித்துள்ளார்.

    இவர் நடித்து வெளிவந்த `பத்மாவத்’ சந்தித்த சர்ச்சையும் அதன்பின் அது பெற்ற வெற்றியும்தான் இதற்கு காரணம்.



    மேலும், இந்த வருடம் பல முக்கியமான படங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய தொடர்களில் நடித்த நடிகை ராதிகா ஆப்தேவும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    1. தீபிகா படுகோனே

    2. ஷாருக்கான்

    3. அமீர்கான்

    4. ஐஸ்வர்யா ராய் பச்சன்

    5. சல்மான் கான்

    6. கேத்திரீனா கைப்

    7. குப்ரா சேட்

    8. இர்பான் கான்

    9. ராதிகா ஆப்தே

    10. அக்‌ஷய் குமார்
    ×