பிரபல இந்திய திரைப்படங்கள் வரிசையில் இடம் பிடித்த 'பொன்னியின் செல்வன்'

’பொன்னியின் செல்வன் -1’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் -1
பொன்னியின் செல்வன் -1
Published on: 

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.

ஐ.எம்.டி.பி. போஸ்டர்

மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஐ.எம்.டி.பி.யின் மிகவும் பிரபலமான 10 இந்திய திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதனை படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com