மிர்ச்சி சிவா நடிக்கும் "பறந்து போ"- ரிலீஸ் தேதி அறிவிப்பு

பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
மிர்ச்சி சிவா நடிக்கும் "பறந்து போ"- ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on: 

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம்.

இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com