என் மலர்
சினிமா செய்திகள்
- 'ஆண் பாவம் பொல்லாதது' படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- ராம் இன் லீலா படத்தின் மூலம் வர்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்த 'ஆண் பாவம் பொல்லாதது' படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் ரியோ ராஜ் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று முன்தினம் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த படத்திற்கு "ராம் in லீலா" என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் வர்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்
இந்நிலையில், ராம் in லீலா படத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
- யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்.ஜி.ஆர் மகன்' மற்றும் 'டி.எஸ்.பி' போன்ற திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் தற்போது 'கொம்புசீவி' என்ற படத்தை இயக்கியுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ள இந்தப் படத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் வெளியானது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படத்தின் 'வஸ்தாரா' பாடல் வெளியாகி உள்ளது. சூப்பர் சுப்பு வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை விஷ்ணு பிரியாவுடன் இணைந்து யுவனும் பாடியுள்ளார்.
- பான் இந்தியா அளவில் இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2வது திரைப்படம் இதுவாகும்.
'தீயவர் குலை நடுங்க' படத்தை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் பரத் இயக்க உள்ள "ஓ சுகுமாரி" படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திருவீர் இணைந்து நடிக்கின்றனர். பான் இந்தியா அளவில் இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பரத் மஞ்சிராஜு இசையமைக்க உள்ள இப்படத்தில் சி.எச். குஷேந்தர் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீ வரபிரசாத் படத்தொகுப்பாளராகவும், திருமலை எம். திருப்பதி தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளனர். மேலும் இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.
கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2வது திரைப்படம் இதுவாகும்.
படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் இப்படம் தொடர்பான தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற இளமை இதோ, இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்," அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதை தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உண்டு.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று நீதிபதி தெரிவித்தார்.
இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம் பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
- அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் உட்கார ஒரு நாற்காலி கூட கொடுக்க மாட்டார்கள்
- பெரும்பாலான பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டு வருகிறோம்"
பாலிவுட் திரைத்துறை மற்றும் மலையாள திரைத்துறை இடையே உள்ள வித்தியாசம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கருத்துக்களை பேசியுள்ளார்.
சமீபத்திய பேட்டியில் பேசிய துல்கர் சல்மான் "நான் பாலிவுட்டில் நடித்தபோது, நான் ஒரு நட்சத்திரம் என்று அனைவரையும் நம்ப வைக்க வேண்டியிருந்தது. என்னைச் சுற்றி எப்போதும் இரண்டு பேர் இருந்தார்கள். நாங்கள் ஒரு சொகுசு காரில் வந்தால் மட்டுமே அவர்கள் எங்களை நட்சத்திரங்களாக அங்கீகரித்தார்கள்.
இல்லையெனில், அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் உட்கார ஒரு நாற்காலி கூட கொடுக்க மாட்டார்கள், மானிட்டரைப் பார்க்க ஒரு இடத்தைக் கூட ஒதுக்க மாட்டார்கள்" என்று கூறினார்.
அதே நேரம் மலையாள திரைத்துறை குறித்து பேசிய துல்கர் சல்மான், எங்கள் துறையில், படங்களுக்கு அதிக செலவு இல்லை. இங்கு யாரும் ஆடம்பரத்திற்கு முன்னுரிமை அளிப்பதில்லை. நாங்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துகிறோம். பெரும்பாலான பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.
துல்கர் சல்மான் 2018 இல் இர்பான் கான் உடன் 'கர்வான்' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி இருந்தார்.
கடைசியாக கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை வராலாற்று படமான 'காந்தா' படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.
- நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார்.
- இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன.
'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் 3-வது சிங்கிள் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முதலாளி என்ற தலைப்பிள் வெளியாகி உள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் மம்மூட்டி, தற்போது பேட்ரியாட் எனும் அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இதில் மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ஸாரின் ஷிஹப் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாக இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மம்மூட்டியுடன் மீண்டும் இணைவது குறித்து பேசிய இயக்குநர் அடூர் கோபாலாகிருஷ்ணன் " என்னுடைய அடுத்த படத்தில் மம்மூட்டியே முக்கிய வேடத்தில் நடிப்பார். மீதமுள்ள கதாபாத்திரங்களுக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது. திரைக்கதை எழுதும் பணி நடந்து கொண்டிருந்தபோது, மையக் கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியின் முகம் மட்டுமே என் நினைவுக்கு வந்தது.
அவர்தான் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான நபராக இருப்பார் என்று நான் உணர்ந்தேன். எனது படங்களில் ஆண் கதாநாயகனாக நடிப்பது இது நான்காவது முறையாகும். நான் வேறு எந்த முன்னணி நடிகருடனும் இவ்வளவு முறை பணியாற்றியதில்லை". என தெரிவித்தார்.
இப்படம் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மம்மூட்டியை அடூர் உலகிற்குள் கொண்டுவருகிறது. கடைசியாக இவர்களின் கூட்டணியில் வெளியான படம் விதேயன் (1994). அடூர் - மம்மூட்டி கூட்டணியில் வெளியான அனந்தரம் (1987), மதிலுகள் (1989) மற்றும் விதேயன் ஆகியவை மலையாள சினிமாவின் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படைப்புகளாகும்.
- நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார்
- இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. முதலில் 'வா வாத்தியார்' படம் டிசம்பர் 5-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இப்படம் ரிலீசாவதில் திடீர் சிக்கல் எழுந்தது. அதாவது படத்தின் இறுதிகட்ட பணிகள் இன்னும் முடியாததால், ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யக்கோரி ஓ.டி.டி. உரிமம் பெற்ற நிறுவனமும் அழுத்தம் தருகிறதாம். இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருகிறது என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
- நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார்.
- இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம் வருகிற 12ஆம் தேதி திரைக்கு வருகிறது
இந்நிலையில், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்தார்.
- படத்தில் ரிஷப்-இன் அசுரத்தனமான நடிப்பை ஹைலைட் செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம்
- நம் நாட்டில் பின்பற்றப்படும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை நான் எப்போதும் மதித்துள்ளேன்
ரிஷப் ஷெட்டி எழுத்து, இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் காந்தாரா. கன்னடத்தில் வெளியான இப்படம் தென்னியந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மாபெரும் வரவேற்பையும், வெற்றியையும் அடுத்து இதன் தொடர்ச்சியாக 'காந்தாரா சாப்டர் 1' எடுக்கப்பட்டது. இதனையும் ரிஷப் ஷெட்டியே நடித்து, இயக்கியிருந்தார். இப்படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி உட்பட பல்வேறு நடிகர்கள் கலந்துகொண்டனர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் கலந்துகொண்டார். விழாவில் ரன்வீர் சிங் காந்தாரா குறித்து பேசியிருந்தார்.
அப்போது, படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டி உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமாக இருந்ததாக கூறிய ரன்வீர் சிங் அதுபோல நடித்தும் காட்டினார். இது ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகவும், பெண் தெய்வத்திற்கும், பேய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை எனவும், இந்த செயல் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், இதற்கு விளக்கம் கொடுத்து மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் ரன்வீர் சிங். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர்,
"படத்தில் ரிஷப்-இன் அசுரத்தனமான நடிப்பை ஹைலைட் செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம். ஒரு நடிகராக அந்த குறிப்பிட்ட காட்சியை நடிப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனை கச்சிதமாக செய்த அவரை போற்றுகிறேன். நம் நாட்டில் பின்பற்றப்படும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை நான் எப்போதும் மதித்துள்ளேன். நான் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
- மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்கிறார்.
- இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில், 24H சீரிஸ் கார் பந்தயத்திற்கு முன்பாக, பத்து மலை முருகன் கோயிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார். இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
- சாரா அர்ஜூன் விழாவில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ‘துரந்தர்’ படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் சாரா அர்ஜூன். மும்பையில் பிறந்த இவர் கடந்த 2011-ம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் சாரா அர்ஜூன்.
'தெய்வத் திருமகள்' திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ரவி மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் இளம்வயது நந்தினியாக ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா என பெரிய நட்சத்திர நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள 'துரந்தர்' படத்தில் சாரா அர்ஜூன் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற 5-ந்தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் மும்பையில் இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடந்தது. இந்த விழாவில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் சாரா அர்ஜூனும் இவ்விழாவில் கலந்து கொண்டார். சாரா அர்ஜூன் விழாவில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
'துரந்தர்' படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் 40 வயதான ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சாரா அர்ஜூன் நடித்துள்ளார். அவருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சாரா அர்ஜூனுக்கு 20 வயது தான். தன்னை விட 20 வயது மூத்த பாலிவுட் நடிகருடன் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என கூறப்படுகிறது.






