என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜிம்பாப்வே-க்கு எதிரான போட்டி... சேப்பாக்கத்தை அதிரவிடும் அனிருத் - கச்சேரிக்கு ரெடியா?
    X

    ஜிம்பாப்வே-க்கு எதிரான போட்டி... சேப்பாக்கத்தை அதிரவிடும் அனிருத் - கச்சேரிக்கு ரெடியா?

    • இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி நாளை நடைபெறுகிறது.
    • அனிருத் இசை கச்சேரி குறித்த அறிவிப்பை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. க்ரூப் சுற்றுப் போட்டிகளைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இந்த சுற்றில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி நாளை (பிப். 26) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    நாளை இரவு 7.00 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், இந்திய அணி மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசை கச்சேரி நடைபெறுகிறது. நாளை மாலை 6.00 மணி முதல் அனிருத் இசை கச்சேரி நடைபெறும். இதற்கான அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது அதிகாரப்பூர்வ X தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

    பரபரப்பான டி20 போட்டிக்கு முன் அனிருத் இசை கச்சேரி நடைபெறுவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலையில், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Next Story
    ×