பைட் கிளப் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

பைட் கிளப் படத்தின் வசூல் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பைட் கிளப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பைட் கிளப் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
Published on

அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த வெள்ளி கிழமை (டிசம்பர் 15) வெளியான பைட் கிளப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் ரூ. 5 கோடியே 75 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு சில தினங்களுக்கு முன் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், பைட் கிளப் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com