என் மலர்
நீங்கள் தேடியது "தியாகராஜன் குமாரராஜா"
- ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார்.
- 2019-இல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
பிரபல இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவர் ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இயக்குநர் தியாகராஜன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2019-இல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையும் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் புதிய படத்துக்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு பிப்ரவரி 2026 முதல் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
- மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள 'டெவில்' பட முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.
- இந்த பாடல் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பகிர்ந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டிருக்கிறது.
'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொள்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

"டெவில்" படத்தின் முதல் பாடலான "கலவி" பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் "கலவி" பாடல் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பகிர்ந்துள்ளார். அதில், ஸ்லோ பாய்சன், அழகா இருக்கு என்று கூறியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.






