மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா... ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு

தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படத்தின் அப்டேட்இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா... ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு
Published on

தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாடர்ன் லவ் சென்னை (நினைவோ ஒரு பறவை) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். சூப்பர் டீலர்க்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் புதிய படத்தில் இணைகின்றனர். இந்த நிைலயில், இருவரும் இணையும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (பிப்ரவரி 16) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் வித்தியாசமான கதையம்சம், ஆழமான அர்த்தமள்ள வசனங்கள் மற்றும் காட்சிப்பதிவுகளில் புதுமை என தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. அதன்படி இவர் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com