search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Kiruthiga Udhayanidhi"

  • சிவா, பிரியா ஆனந்த் நடித்த 'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி
  • அடுத்ததாக இவர் 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

  "கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில், இசை புயல் A.R .ரகுமானின் இசையில், ஸ்ருதிஹாசனின் குரலில் "காதலிக்க நேரமில்லை" என்ற திரைப்படத்திற்காக நான் எழுதியப் பாடல் பதிவானது" என பாடலாசிரியர் சினேகன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  சிவா, பிரியா ஆனந்த் நடித்த 'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் ஆண்டனி நடித்த 'காளி', 'பேப்பர் ராக்கெட்' என்ற வெப்தொடர் ஆகியவற்றை இயக்கினார்.

  அடுத்ததாக இவர் 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளனர். யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

  தமிழில் இதற்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு இதே தலைப்பில் படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ரொமான்ஸ் படமான இப்படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

  • 'கிடா' படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
  • முன்னதாக இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

  ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கி இருக்கும் புதிய படம் மங்கை. இதில் 'கயல்' ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  இந்த நிலையில் மங்கை படத்தின் முதல் பாடலை கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ளார். 'கிடா' படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  முன்னதாக இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் வெளியிட்டனர். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இதர தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • நடிகர் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
  • இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'இறைவன்', 'சைரன்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.  இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி, 'வணக்கம் சென்னை', 'காளி', 'பேப்பர் ராக்கெட்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வினய், யோகிபாபு, லால், ஜான் கெக்கன், லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கவாமிக் யூ ஆரி ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


  காதலிக்க நேரமில்லை போஸ்டர்

  இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'காதலிக்க நேரமில்லை' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


  • நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
  • இதைத்தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'இறைவன்', 'சைரன்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


  ஏ.ஆர்.ரகுமான் -நித்யா மேனன்

  இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் அடுத்தப்படத்தை 'வணக்கம் சென்னை', 'காளி', 'பேப்பர் ராக்கெட்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  ‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’ படத்தின் கதாநாயகியான சுனைனாவை தமிழ் சினிமா கவனிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
  ‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’. இதில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கிருத்திகா உதயநிதி பேசும்போது, ‘பெண்கள் தினத்தில் தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையை கேட்டார். 

  எனக்கும் தயாரிப்பாளர் பாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கலை இயக்குனர் சக்தி படத்துக்கு மிகப்பெரிய பலம். உயிரை பணய வைத்து, ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தார் ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி. வில்லனாக நடிக்க ஆர்கே சுரேஷ் ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன்.   4 கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன். பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள்’ என்றார். 
  ×