மங்கை படத்தின் முதல் பாடல் வெளியீடு

'கிடா' படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
மங்கை படத்தின் முதல் பாடல் வெளியீடு
Published on

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கி இருக்கும் புதிய படம் மங்கை. இதில் 'கயல்' ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் மங்கை படத்தின் முதல் பாடலை கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ளார். 'கிடா' படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் வெளியிட்டனர். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இதர தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com