search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snekan"

    • சிவா, பிரியா ஆனந்த் நடித்த 'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி
    • அடுத்ததாக இவர் 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    "கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில், இசை புயல் A.R .ரகுமானின் இசையில், ஸ்ருதிஹாசனின் குரலில் "காதலிக்க நேரமில்லை" என்ற திரைப்படத்திற்காக நான் எழுதியப் பாடல் பதிவானது" என பாடலாசிரியர் சினேகன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    சிவா, பிரியா ஆனந்த் நடித்த 'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் ஆண்டனி நடித்த 'காளி', 'பேப்பர் ராக்கெட்' என்ற வெப்தொடர் ஆகியவற்றை இயக்கினார்.

    அடுத்ததாக இவர் 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளனர். யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    தமிழில் இதற்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு இதே தலைப்பில் படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ரொமான்ஸ் படமான இப்படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

    • அமீர்- ஞானவேல் ராஜா விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
    • இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


    இந்நிலையில், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


    • பாடலாசிரியர் சினேகன் பல படங்களுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
    • இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

    தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். கடந்த 2000-ஆம் ஆண்டு திரைப்படங்களுக்கு பாடல் எழுத தொடங்கிய இவர் கிட்டத்தட்ட 2500 பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். இவர் பாடலாசிரியராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.


    கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான சினேகன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இவர் நடிகை கன்னிகாவை கடந்த 2021-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


    சினேகன் பகிர்ந்த புகைப்படம்

    இந்நிலையில், பாடலாசிரியர் சினேகன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சினேகன், "தனது அன்பான வாழ்த்துக்களால் எனது பிறந்த நாளை மிக சிறந்த நாளாக மாற்றி அமைத்த என் தலைவருக்கு கோடானக் கோடி நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.



    ×