கமலை சந்தித்து வாழ்த்து பெற்ற சினேகன்.. வைரலாகும் புகைப்படம்

பாடலாசிரியர் சினேகன் பல படங்களுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார்.இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
கமலை சந்தித்து வாழ்த்து பெற்ற சினேகன்.. வைரலாகும் புகைப்படம்
Published on

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். கடந்த 2000-ஆம் ஆண்டு திரைப்படங்களுக்கு பாடல் எழுத தொடங்கிய இவர் கிட்டத்தட்ட 2500 பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். இவர் பாடலாசிரியராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான சினேகன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இவர் நடிகை கன்னிகாவை கடந்த 2021-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சினேகன் பகிர்ந்த புகைப்படம்

இந்நிலையில், பாடலாசிரியர் சினேகன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சினேகன், "தனது அன்பான வாழ்த்துக்களால் எனது பிறந்த நாளை மிக சிறந்த நாளாக மாற்றி அமைத்த என் தலைவருக்கு கோடானக் கோடி நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com