என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "red gaint movies"

    • விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • சமீபத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு 'வாரிசு' படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்க கோரி உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன் என்று கூறினார்.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    வாரிசு

    சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ அளித்துள்ள பேட்டியில், ''வாரிசு படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்க கோரி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன்" என தெரிவித்திருந்தார்.


    வாரிசு

    இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் சென்னை,செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு ஆகிய பகுதிகளில் 'வாரிசு' திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அஜித் நடிக்கும் 'துணிவு' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இதைத்தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'இறைவன்', 'சைரன்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


    ஏ.ஆர்.ரகுமான் -நித்யா மேனன்

    இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் அடுத்தப்படத்தை 'வணக்கம் சென்னை', 'காளி', 'பேப்பர் ராக்கெட்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் தேஜாவு.
    • இந்த படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மிஸ்டரி திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார்.


    அருள் நிதி

    இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் தேஜாவு திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நாளை (22-07-2022) திரையரங்குகளில் வெளியாகிறது.

    இந்நிலையில் நடிகர் அருள் நிதியின் பிறந்தநாள் விழா இன்று ரெட் ஜெயண்ட் மூவீஸ் அலுவலகத்தில்  இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லைகா புரொடக்‌ஷன்ஸ் சி.இ.ஓ. தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் அலுவலகத்தினர் கலந்து கொண்டனர். 

    ×