அஜித்தை தொடர்ந்து விஜய் படத்தின் உரிமையை கைப்பற்றிய உதயநிதி

விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.சமீபத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு 'வாரிசு' படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்க கோரி உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன் என்று கூறினார்.
அஜித்தை தொடர்ந்து விஜய் படத்தின் உரிமையை கைப்பற்றிய உதயநிதி
Published on

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

வாரிசு

சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ அளித்துள்ள பேட்டியில், ''வாரிசு படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்க கோரி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன்" என தெரிவித்திருந்தார்.

வாரிசு

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் சென்னை,செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு ஆகிய பகுதிகளில் 'வாரிசு' திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிக்கும் 'துணிவு' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com