search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டோனி, ரோகித், கோலி யாரும் இல்லை.. எனக்கு பிடித்த கேப்டன் நான் தான்.. பும்ரா ஓபன் டாக்
    X

    டோனி, ரோகித், கோலி யாரும் இல்லை.. எனக்கு பிடித்த கேப்டன் நான் தான்.. பும்ரா ஓபன் டாக்

    • டோனி உள்ளுணர்வுகளை நம்பி நிறைய எனக்கு பாதுகாப்பு கொடுத்தார்.
    • ரோகித் தலைமையில் நீண்ட காலம் விளையாடியதற்கும் நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

    டி20 உலகக் கோப்பை தொடருடன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பெயர் அதிகமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி காயமடைவதால் அவரை கேப்டனாக அறிவிக்க முடியாது என தேர்வு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில போட்டிகள் மட்டுமே கேப்டனாக பணியாற்றிய சூர்யகுமாரை நியமித்தது குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் நான் தான் எனக்கு மிகவும் பிடித்த கேப்டன் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வெளிப்படையாக பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து பும்ரா கூறியதாவது:-

    நான் தான் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த கேப்டன். சில போட்டிகளில் நானும் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். அதே சமயம் இங்கே மகத்தான கேப்டன்களும் உள்ளனர். இருப்பினும் நான் என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வேன்.

    இந்தியாவுக்காக அறிமுகமான போது எம்எஸ் டோனி உள்ளுணர்வுகளை நம்பி நிறைய எனக்கு பாதுகாப்பு கொடுத்தார். எனர்ஜியால் செயல்படக்கூடிய விராட் கோலி ஆர்வத்துடன் பிட்னஸை பின்பற்றுமாறு தள்ளினார். ரோகித் சர்மா வீரர்களின் உணர்வுகளை அறிந்து அவர்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து உதவினார்.

    அந்த வகையில் அனைவரும் இந்திய அணி முன்னோக்கி செல்வதற்கு உதவினர். குறிப்பாக ரோகித் சர்மா இளம் வீரர்களிடம் சீனியர் ஜூனியர் என்ற பாகுபாடு இல்லாமல் பழகுவார். குறிப்பாக அவர் இளம் வீரர்களை நாம் அணியில் இல்லை என்று நினைக்க விட்டதில்லை. எனவே ரோகித் சர்மா கேப்டனாக கிடைத்ததற்கும் அவருடைய தலைமையில் நீண்ட காலம் விளையாடியதற்கும் நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று கருதுவேன்.

    என பும்ரா கூறினார்.

    Next Story
    ×