search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "U19 Cricket World Cup"

    • இந்தியாவின் முஷீர் கான் அதிரடியாக ஆடி 118 ரன்களும் எடுத்தார்.
    • அடுத்து ஆடிய அயர்லாந்து 100 ரன்களில் சுருண்டது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. முதல் லீக் போட்டியில் வங்காளதேசத்தை இந்தியா வென்றது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 2வது லீக் போட்டியில் அயர்லாந்து அணியுடன் மோதியது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முஷீர் கான் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 118 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் உதய் சஹாரன் அரை சதம் கடந்து 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் குவித்தது.

    அயர்லாந்து அணி சார்பில் ஆலிவர் ரிலே 3 விக்கெட்டும், ஜான் மெக்நல்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. இந்திய வீரர்களின் துல்லிய பந்துவீச்சால் அயர்லாந்து 100 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்காரணமாக இந்தியா 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியாவின் நமன் திவாரி 4 விக்கெட்டும், சவுமி பாண்டே 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 6 வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

    இந்தியா வரும் 28-ம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

    ×