search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pawan Shah"

    ஹம்பன்டோட்டாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் பவான் ஷா 282 ரன்களை குவித்தார். #PawanShah #INDvSL
    ஹம்பன்டோட்டா:

    ஹம்பன்டோட்டாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மராட்டியத்தை சேர்ந்த பவான் ஷா 282 ரன்கள் (332 பந்து, 33 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி ரன்-அவுட் ஆனார். இளையோர் டெஸ்டில் ஒரு வீரரின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அவர், கலானா பெரேராவின் ஒரு ஓவரில் 6 பந்துகளையும் பவுண்டரிக்கு ஓடவிட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 14 ரன்களில் ரன்-அவுட் ஆனார்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.  #PawanShah #INDvSL
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா முதல்நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்துள்ளது.
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டம் இன்று ஹம்பன்டோட்டாவில் தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அதர்வா டைட், அனுஜ் ராவத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அனுஜ் ராவத் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.



    அடுத்து பவன் ஷா களம் இறங்கினார். இவர் அதர்வா டைட் உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள். அதர்வா 172 பந்தில் 177 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பதிக்கல் 6 ரன்னிலும், ஜுயல் 41 ரன்னிலும் ஆட்டமிழக்க, பவனட ஷா இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 90 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்துள்ளது. பவன் ஷா 177 ரன்னுடனும், வதேரா 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ×