என் மலர்

  செய்திகள்

  U19 ஒருநாள் கிரிக்கெட்- 5-வது போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது
  X

  U19 ஒருநாள் கிரிக்கெட்- 5-வது போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கையில் நடைபெற்று வந்த இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. #IND19
  19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் நான்கில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்று சமநிலையில் இருந்தது.

  இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரரான பெர்னாண்டோ 95 ரன்களும், 4-வது வீரராக களம் இறங்கிய நுவாநிது பெர்னாண்டோ 56 ரன்களும் அடிக்க 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது.

  பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. யாஷவி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தேவ்தத் படிக்கல் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பவன் ஷா 36 ரன்னில் வெளியேறினார்.

  மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 128 பந்தில் 114 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய அணி 42.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய இளையோர் அணி 3-2 வென்றது. 
  Next Story
  ×