என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    U19 ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா-அமெரிக்கா மோதல்
    X

    U19 ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா-அமெரிக்கா மோதல்

    • தொடக்க நாளில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
    • ஆயுஷ் மாத்ரே தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது

    19 வயதுக்குட்பட்டவருக்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 1988-ம் ஆண்டு ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது.

    இதுவரை 15 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா பட்டம் வென்றது.

    16-வது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 2 நாடுகள் இணைந்து நடத்துகிறது.இந்தப் போட்டி நாளை (15- ந் தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறு கிறது.

    இதில்16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள நாடுகள் விவரம்:-

    ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜப்பான் (ஏ பிரிவு), இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து, அமெரிக்கா (பி பிரிவு), இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து (சி பிரிவு), தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தான்சானியா (டி பிரிவு).

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    தொடக்க நாளில் 3 ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது.

    நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் - தான் சானியா அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×