என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜடேஜா?: CSK - RR பேச்சுவார்த்தையில் இழுபறி
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேற இருப்பது உறுதியானது.
- சஞ்சு சாம்சன் - ஜடேஜா இருவரும் ரூ.18 கோடி மதிப்பு கொண்ட வீரர்களாக உள்ளனர்
கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிகெட் வீரரான சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கும், தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற இருப்பது ஏறக்குறைய உறுதியானது. ஆனால், எந்த அணிக்கு செல்வார் என்பதில் மர்மம் நீடித்து வந்தது.
இந்நிலையில், சஞ்சு சாம்சன் - ஜடேஜாவை வர்த்தகம் செய்துகொள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சஞ்சு சாம்சன் - ஜடேஜா இருவரும் ரூ.18 கோடி மதிப்பு கொண்ட வீரர்களாக உள்ளனர், ஆனால், நேரடி வர்த்தகத்திற்கு பதிலாக ஜடேஜாவுடன், டெவால்ட் ப்ரேவிஸையும் சேர்த்து ராஜஸ்தான் அணி கேட்பதால் அதனை ஏற்க சிஎஸ்கே தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.






