என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆர்.சி.பி அணி குறித்து வெளியான தகவல்- ரசிகர்கள் சோகம்
    X

    ஆர்.சி.பி அணி குறித்து வெளியான தகவல்- ரசிகர்கள் சோகம்

    • ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது.
    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஆர்.பி.சி. அணியை நிர்வகித்து வருகிறது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் ஆர்.சி.பி. அணியை விற்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Next Story
    ×