5000mAh பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி... ரூ. 7,000 பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

இந்த ஸ்மார்ட்ரோன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
5000mAh பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி... ரூ. 7,000 பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்..!
Published on

லாவா நிறுவனத்தின் யுவா சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாவா யுவா ஸ்டார் 3 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் SC9863A பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் ஓஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் உள்ளது.

புதிய லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் இன்டஸ் பிளாக் மற்றும் சியாச்சென் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் மாத வாக்கில் நாடு முழுக்க ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 1 வருட வாரண்டி மற்றும் வீட்டிலேயே இலவச சர்வீஸ் வசதி வழங்கப்படுகிறது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com