என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரூ. 6,799-க்கு மிலிட்டரி தரத்தில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    ரூ. 6,799-க்கு மிலிட்டரி தரத்தில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

    • இந்த ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    • இதில் டைனமிக் பார் அம்சம் உள்ளது.

    ஐடெல் நிறுவனம் என்ட்ரி லெவல் பிரிவில் A சீரிசை விரிவுபடுத்தி, இந்திய சந்தையில் புதிய A100 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான A90 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் இந்த விலை பிரிவில் அரிதாகக் காணப்படும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இதில் உள்ள டைனமிக் பார் அம்சம், பேட்டரி நிலை, அழைப்புகள், அறிவிப்புகள் போன்றவற்றை தடையின்றி காட்டுகிறது.

    மேலும், IR பிளாஸ்டர் வசதி மூலம் டிவி, ஏசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தொலைவில் இருந்து கட்டுப்படுத்தலாம். DTS தொழில்நுட்பத்துடன் கூடிய சவுண்ட் அமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளது. செயல்திறன் அம்சங்களை பொறுத்தவரை, UNISOC T7100 பிராசஸருடன் 3GB அல்லது 4GB ரேம் ஆப்ஷன்கள் உள்ளன. இதனுடன் 8GB வரை விர்ச்சுவல் ரேம் ஆதரவு வழங்கப்படுகிறது.

    புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் இயங்குதளத்தில் இயங்குகிறது. புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன், 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10W சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் சில்க் கிரீன், ப்யூர் பிளாக், டைட்டானியம் கோல்ட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஐடெல் A100 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.6,799 என்றும், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.7,499 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், 100 நாட்களுக்குள் இலவசமாக திரை மாற்று வசதியும் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×