என் மலர்
மொபைல்ஸ்
- இந்த மொபைல்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை பேட்டரி நீடிக்கும்.
- குறிப்பாக 32 மணிநேரம் வரை தொடர்ந்து வீடியோ பார்க்கலாம்.
ரியல்மி நிறுவனம் வருகிற 29ஆம் தேதி இந்திய சந்தையில் ரியல்மி P4 பவர் மொபைல் போனை வெளியிட உள்ளது. இந்த மொபைல்போன் 10,001mAh என்ற மெகா பேட்டரி திறன்கொண்டது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மொபைல் போன்களில் இது தான் அதிக பேட்டரி திறன்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைல்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை பேட்டரி நீடிக்கும். குறிப்பாக 32 மணிநேரம் வரை தொடர்ந்து வீடியோ பார்க்கலாம் என்று Realme கூறியுள்ளது.
-30°C முதல் 56°C வரையிலான வெப்பநிலையில் கூட இந்த மொபைல்போன் செயல்படும். இந்த மொபைல்போன் 27W ரிவர்ஸ் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது. இது தேவைப்படும்போது மற்ற ஸ்மார்ட்போன்கள் மற்றும் கருவிகளுக்கு சார்ஜ் அளிக்க உதவும் .இதன் மொபைல்போனின் விலை ரூ.25,000 - ரூ.30,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புதிதாக வெளியிடப்பட்ட டீசர் படம், கடை முகப்பு பலகை அல்லது ஒரு முக்கிய உட்புற டிசைனை பற்றிய முதல் தோற்றத்தை வழங்குகிறது.
- இந்த நிறுவனம் ஏற்கனவே அதன் சாதனங்களை உள்ளூரில் உற்பத்தி செய்கிறது.
லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங், அதன் முதல் உலகளாவிய கடை இந்தியாவில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த அறிவிப்புடன், கடையின் தொழில்துறை வடிவமைப்பை குறிக்கும் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய இடம், வாடிக்கையாளர்கள் நத்திங் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் வடிவமைப்புத் தத்துவத்தை நெருக்கமாக அனுபவிப்பதற்கு பிரத்யேக இடமாக செயல்படும் என்று நத்திங் நிறுவனம் கூறியது. இது பிராந்தியத்தில் ஆன்லைனில் இயக்கப்படும் விற்பனை மாதிரியிலிருந்து ஒரு மாற்றத்தை குறிக்கிறது.
டீசர் சிக்னேச்சர் அழகியலை வெளிப்படுத்துகிறது. புதிதாக வெளியிடப்பட்ட டீசர் படம், கடை முகப்பு பலகை அல்லது ஒரு முக்கிய உட்புற டிசைனை பற்றிய முதல் தோற்றத்தை வழங்குகிறது. 1:10 அளவில் "எலிவேஷன்" மற்றும் "பிளான்" காட்சிகளுடன் முழுமையான தொழில்நுட்ப கட்டிடக்கலை வரைபடமாக வழங்கப்படுகிறது - வடிவமைப்பு நிறுவனத்தின் வெளிப்படையான மற்றும் தொழில்துறை அடையாளத்துடன் ஒத்துப்போகிறது.
இந்திய சந்தையின் முக்கியத்துவம் இந்தியாவில் முதல் உலகளாவிய முதன்மை நிறுவனத்தை நிறுவுவதற்கான முடிவு, நத்திங்கின் வளர்ச்சி மூலோபாயத்தில் நாட்டின் மையப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த நிறுவனம் ஏற்கனவே அதன் சாதனங்களை உள்ளூரில் உற்பத்தி செய்கிறது. இந்த சில்லறை விற்பனை விரிவாக்கம், உலகளாவிய மின்னணு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக நுகர்வோருக்கு அனுபத்தை கடத்தி செல்வதன் பரந்த போக்கை பிரதிபலிக்கிறது. இது வலுவான சமூக ஈடுபாட்டை உருவாக்குகிறது.
- ANC இல்லாமல் பேட்டரி ஆயுள் 40 மணிநேரம் வரையிலும், ANC உடன் 25 மணிநேரம் வரையிலும் நீடிக்கும்.
- ASAP சார்ஜ் மூலம் பத்து நிமிட சார்ஜிங் செய்து மூன்று மணிநேரம் வரை பிளேபேக்கை பெற முடியும்.
போட் (boAt) நிறுவனம் நிர்வாணா கிரவுன் என்ற ட்ரூ வயர்லெஸ் (TWS) இயர்பட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சோனிக் ARC தொழில்நுட்பத்தைக் கொண்ட சார்ஜிங் கேஸுடன் வருகிறது . இந்த கேஸ் ஹாப்டிக் ஃபீட்பேக் உடன் சுழற்றக்கூடிய கண்ட்ரோல் டயல், ஒரு மல்டி-ஃபங்ஷனல் பட்டன் மற்றும் கஸ்டம் RGB LED-க்களை ஒருங்கிணைக்கிறது. அழைப்புகளுக்கு பதிலளிக்கவும், மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல் மல்டி-ஃபங்ஷனல் பட்டன் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் டயல் ஒலியளவை சரிசெய்ய அனுமதிக்கிறது. மேலும் உள்ளமைக்கக்கூடிய ஹாப்டிக் இன்டென்சிட்டி (குறைந்த, நடுத்தர, உயர்) ஆதரிக்கிறது.
சார்ஜிங் கேஸ் ஆதரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ரிமோட் கேமரா ஷட்டராகவும் செயல்படுகிறது. தற்செயலான அழுத்தங்களைத் தடுக்க ஒரு லாக் செயல்பாட்டை உள்ளடக்கியது. இயர்பட்கள் 50dB வரை ஹைப்ரிட் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) மற்றும் ரியல்-டைம் ஸ்பேஷியல் ஆடியோவை வழங்குகின்றன. AI- அடிப்படையிலான ENx தொழில்நுட்பத்துடன் கூடிய ஆறு மைக்ரோஃபோன்கள் பயனரின் குரலைத் தனிமைப்படுத்தி, அழைப்புகளின் போது குரல் தெளிவாக கேட்பதை உறுதிப்படுத்த பின்னணி இரைச்சலை குறைக்கின்றன.
இரண்டு சாதனங்களுக்கு இடையில் மாறுவதற்கு இயர்பட்கள் மல்டிபாயிண்ட் இணைப்பை ஆதரிக்கின்றன மற்றும் பிளேபேக்கை தானாக இடைநிறுத்த அல்லது மீண்டும் தொடங்க இன்-இயர் டிடெக்ஷனை கொண்டுள்ளன. போட் ஹியரபில்ஸ் (boAt Hearables) ஆப் v2.0-ஐ பயன்படுத்தி, பயனர்கள் முன்னமைக்கப்பட்ட மற்றும் கஸ்டம் EQ-க்களை அமைக்கலாம். LED வண்ணங்கள் மற்றும் வடிவங்களைத் கஸ்டமைஸ் செய்யலாம், இயர்பட்கள் மற்றும் ரொடேஷனல் கிரவுன் கண்ட்ரோல்களை மாற்றியமைக்கலாம்., ANC மோட்களை நிர்வகிக்கலாம், பேட்டரி அளவைக் கண்காணிக்கலாம் மற்றும் ஓவர்-தி-ஏர் அப்டேட்களை பெறலாம்.

ANC இல்லாமல் பேட்டரி ஆயுள் 40 மணிநேரம் வரையிலும், ANC உடன் 25 மணிநேரம் வரையிலும் நீடிக்கும். ASAP சார்ஜ் மூலம் பத்து நிமிட சார்ஜிங் செய்து மூன்று மணிநேரம் வரை பிளேபேக்கை பெற முடியும். இதில் உள்ள BEAST™ மோட் கேமிங்கிற்கு லோ-லேடன்சி ஆடியோவை செயல்படுத்துகிறது. இயர்பட்கள் சாரல் மற்றும் வியர்வை ஆகியவற்றை தாங்கும் வகையில் IPX4 தரச்சான்று பெற்றுள்ளன. கூகுள் ஃபாஸ்ட் பேர் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஸ்விஃப்ட் பேர் இரண்டையும் ஆதரிக்கின்றன. மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசசதியும் உள்ளன.
புதிய போட் நிர்வானா கிரவுன் (BoAt Nirvana Crown) மாடல் பிளேசிங் ரெட், கன்மெட்டல் கிரே மற்றும் சஃபையர் புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை (முதல் ஏழு நாட்களுக்கு மட்டும்) ரூ. 2,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இதன் விலை ரூ. 2,799 என மாறிவிடும்.
இந்த இயர்பட் அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் போட் அதகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- கவர் ஸ்கிரீனில் 32MP செல்ஃபி கேமரா, மெயின் ஸ்கிரீனில் 20MP லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
- புதிய ரேசர் ஃபோல்டு மாடலில் AI சார்ந்த அம்சங்களும் உள்ளது.
நுகர்வோர் மின்னணு கண்காட்சி (CES) 2026 இல் மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டது. இது மோட்டோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது, இது இரண்டாவது மடிக்கக்கூடிய மாடலாக ரேசர் ஃபிளிப் மாடலுடன் இணைகிறது.
மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு மாடலில் 8.1 இன்ச் உள்புற ஸ்கிரீன் மற்றும் 6.6 இன்ச் கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது மோட்டோ பென் அல்ட்ரா ஸ்டைலஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் AI அம்சங்களும் உள்ளன.
மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு அம்சங்கள்:
மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு ஸ்மார்ட்போன் பான்டோன் பிளாக்னெட் புளூ மற்றும் பான்டோன் லில்லி ஒயிட் வண்ணங்களில் கிடைக்கும். வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது வளைந்த விளிம்புகள், ஹிஞ்ச் (கீல்) மற்றும் மோட்டோரோலாவின் தற்போதைய ஸ்மார்ட்போன் வடிவமைப்புகளை நெருக்கமாக ஒத்த பின்புற கேமரா பம்ப் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் கூற்றுப்படி, மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 8.1 இன்ச் LTPO உள்புற டிஸ்ப்ளே, 6.6 இன்ச் வெளிப்புற ஸ்கிரீனுடன் வருகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP சோனி பிரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டுள்ளது.
கவர் ஸ்கிரீனில் 32MP செல்ஃபி கேமரா, மெயின் ஸ்கிரீனில் 20MP லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரேசர் ஃபோல்டு மாடலில் AI சார்ந்த அம்சங்களும் உள்ளது. மோட்டோரோலா, ரேசர் ஃபோல்டு ஸ்டைலஸ் உள்ளீட்டிற்காக மோட்டோ பென் அல்ட்ரா சப்போர்ட் கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு மாடலின் பேட்டரி, சிப்செட் மற்றும் பரிமாணங்கள் உள்ளிட்ட பிற விவரங்களை வெளியிடவில்லை. அதன் விலை மற்றும் விற்பனை விவரங்களும் ரகசியமாகவே உள்ளது.
- ஸ்மார்ட்போன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. மேலும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
- மிகப்பெரிய பேட்டரியுடன் கூட, இதன் எடை வெறும் 216 கிராம் மற்றும் அளவு 8 மில்லிமீட்டருக்கும் குறைவாக உள்ளது.
ஹானர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி, சீன சந்தையில் ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6.79 இன்ச் 1.5K 120Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் புதிய மீடியாடெக் டிமென்சிட்டி 8500 எலைட் சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸருடன் வெளியாகி இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.
இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம், ஆறு வருட வாரண்டி கொண்ட மிகப்பெரிய, 10,080mAh நான்காம் தலைமுறை சிலிகான்-கார்பன் பேட்டரி ஆகும். மேலும் ஹானர் நிறுவனத்தின் சொந்த ஹானர் வின் சீரிஸ் மாடல்களை தொடர்ந்து 10,000mAh பேட்டரி பிரிவில் நுழையும் இரண்டாவது ஸ்மார்ட்போன் பேட்டரி இதுவாகும்.
மிகப்பெரிய பேட்டரியுடன் கூட, இதன் எடை வெறும் 216 கிராம் மற்றும் அளவு 8 மில்லிமீட்டருக்கும் குறைவாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. மேலும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் தனித்துவமான பவர் சிக்னல் ஐலேண்ட் வடிவமைப்பு, சுயமாக உருவாக்கப்பட்ட RF மேம்பாட்டு சிப் C1+ மற்றும் புதுமையான இணையான இரட்டை-ரெயில் ஆண்டெனா வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஹானர் பவர் 2 அம்சங்கள்:
6.79-இன்ச் (2640×1200 பிக்சல்கள்) 1.5K AMOLED 120Hz டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 எலைட் 4nm பிராசஸர்
மாலி-G720 MCU GPU
12GB LPDDR5X ரேம்
256GB / 512GB UFS 4.1 மெமரி
ஆண்ட்ராய்டு 16 சார்ந்த மேஜிக் ஓஎஸ் 10.0
டூயல் சிம் ஸலாட்
50MP கேமரா, OIS
5MP அல்ட்ரா-வைடு கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
இன்ஃப்ராரெட் சென்சார்
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP69K + IP69 + IP68 + IP66)
5G SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11ax (2.4GHz/5GHz), ப்ளூடூத் 6.0
10,080mAh பேட்டரி
80W சூப்பர்சார்ஜ், 27W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன் சன்ரைஸ் ஆரஞ்சு, ஸ்னோ ஒயிட் மற்றும் ஃபேண்டம் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. சீன சந்தையில் வருகிற 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஹானர் பவர்2 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.34,840 என்றும் 12ஜிபி ரேம், 512ஜிபி மெமரி மாடல் ரூ. 38,710-க்கும் கிடைக்கும்.
- ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.39,999 ஆகும்.
- கடந்த ஜனவரி 2025 இல் வெளியான ரியல்மி 14 ப்ரோ பிளஸ் விலை ரூ.29,999 இல் தொடங்கியது.
ரியல்மி நிறுவனம் வருகிற 6ஆம் தேதி இந்திய சந்தையில் ரியல்மி 16 ப்ரோ சீரிசை வெளியிட உள்ளது. அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, புதிய போன்களின் விலை குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன. புதிய சீரிசில் இரண்டு மாடல்கள் இருக்கும், அதாவது ரியல்மி 16 ப்ரோ 5ஜி, ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி. இவை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.
விலையை பொருத்தவரை ரியல்மி 16 ப்ரோ 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.31,999 என தொடங்கும். இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ.33,999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.36,999 என்றும் நிர்ணயிக்கப்படுகிறது.
ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.39,999 ஆகும். டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.41,999 ஆகும். டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.44,999 ஆகும்.
ஏற்கனவே விற்பனையில் உள்ள ரியல்மி 15 ப்ரோ 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.31,999 இல் தொடங்கி, அதிகபட்சமாக 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் ரூ.38,999 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த சீரிசில் ப்ரோ பிளஸ் மாடல் எதுவும் இல்லை. அதற்கு முன்பாக கடந்த ஜனவரி 2025 இல் வெளியான ரியல்மி 14 ப்ரோ பிளஸ் விலை ரூ.29,999 இல் தொடங்கியது.
காலப்போக்கில், ப்ரோ சீரிசின் தொடக்க விலை மாறாமல் உள்ளது, இருப்பினும் டாப் வேரியண்ட்களின் விலை அதிகரித்துள்ளது. இடையில் தற்போது மீண்டும், ப்ரோ பிளஸ் வேரியண்ட் வந்தவுடன், டாப் மாடல் விலை தற்போது ரூ.45,000-ஐ நெருங்குகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 7,000mAh பேட்டரி மற்றும் 200MP பிரைமரி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸர் கொண்டிருக்கும். ரியல்மி 16 ப்ரோ 5ஜி மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் சிப்செட் கொண்டிருக்கிறது.
இந்த விலைகளில், ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் ஒன்பிளஸ் நார்டு 5 , iQOO நியோ 10 மற்றும் ஓப்போ F31 ப்ரோ பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும்.
- ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
- ‘வைபை நெட்வொர்க்’ மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இது உதவுகிறது.
இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நாடு தழுவிய அளவில் 'வைபை' அழைப்பு எனப்படும் 'வாய்ஸ் ஓவர் வைபை' சேவையை இந்த புத்தாண்டில், அறிமுகம் செய்துள்ளது.
இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யும்.
'வைபை நெட்வொர்க்' மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இது உதவுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற பலவீனமான 'மொபைல் சிக்னல்' உள்ள இடங்களில் தெளிவான மற்றும் நம்பகமான இணைப்பை இது உறுதி செய்கிறது. இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.
வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன்களில் 'வைபை காலிங்' என்பதை மட்டும் 'செட்டிங்ஸ்' அமைப்பில் இயக்க வேண்டும்.
இந்த தகவல்களை தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு செல்லலாம் அல்லது 18001503 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
- புதிய ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யுஐ 7 ஓஎஸ் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி, 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வரும் 2026 ஜனவரி 6ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி 512 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.43,999 விலையில் அறிமுகமாக இருக்கிறது. மேலும் இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.35,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட், 6.8 இன்ச் ஃபுல் ஹெச்டி 2800x1280 பிக்சல், AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 50MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
புதிய ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யுஐ 7 ஓஎஸ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி, 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன.
- மோட்டோரோலா சிக்னேச்சர் முன்பு கீக்பெஞ்சில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
- இது அட்ரினோ 829 GPU உடன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர் வழங்கப்படலாம்.
மோட்டோரோலா சிக்னேச்சர் ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. புதிய சாதனத்தின் வெளியீட்டு தேதியை நிறுவனம் அறிவித்து, வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை வெளியிட்டது. பிரீமியம் மாடலாக நிலைநிறுத்தப்படும் இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ பதிவுகள் மற்றும் பிளிப்கார்ட் மைக்ரோசைட் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் மோட்டோரோலா ஃபிளாக்ஷிப்-கிரேடு செயல்திறனுடன் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட மேம்பட்ட கேமரா வன்பொருளையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு பிரபல பென்ச்மார்க்கிங் தளத்திலும் தோன்றியது.
மோட்டோரோலா சிக்னேச்சர் ஜனவரி 7, 2026 அன்று இந்தியாவில் வெளியிடப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. மோட்டோரோலா சிக்னேச்சரில் உள்ள பின்புற பேனல் ஃபேப்ரிக் ஃபினிஷ் (துணி) கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாட் டிஸ்ப்ளே, சீரான, மெல்லிய பெசல்கள் மற்றும் முன் கேமராவிற்காக மையப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் ஸ்லாட் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் உள்ளன. இடது புறத்தில் மற்றொரு பொத்தான் தோன்றும், இது கேமரா கண்ட்ரோல் பொத்தானாக இருக்கலாம் அல்லது AI அல்லது பிற செயல்பாடுகளை ஷாட்கட் மூலம் இயக்க செய்வதற்காக பயன்படுத்தப்படலாம்.
மோட்டோரோலா சிக்னேச்சர் முன்பு கீக்பெஞ்சில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒற்றை கோரில் 2,854 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனைகளில் 9,411 புள்ளிகளையும் பெற்றது. பட்டியல் 3.80GHz இல் இரண்டு கோர்கள் மற்றும் 3.32GHz இல் ஆறு கோர்கள் கொண்ட CPU இருப்பதாக காட்டியது.
இது அட்ரினோ 829 GPU உடன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர் வழங்கப்படலாம். இது 16 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
- விற்பனை வருகிற டிசம்பர் 23ஆம் தேதி, பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
- இத்துடன் டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் மாடலாக மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 5.99 மில்லிமீட்டர் அளவில் மிக மெல்லியதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனி 5000mAh பேட்டரியுடன், 68W டர்போ-பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ஸ்மார்ட்போன் பிரியர்கள் விரும்பும்படியான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டி மூலம் மோட்டோரோலா எட்ஜ் 70 மாடல் இயங்குகிறது. இத்துடன் அட்ரினோ 722 ஜிபியு கிராஃபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு அப்டேட், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
புதிய எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் 6.7 இன்ச் 2712x1220 பிக்சல் pOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, முன்புறம் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மோட்டோ ஏஐ 2.0 மூலம் ஏ.ஐ. இமேஜ் ஸ்டூடியோ (AI Image Studio), ஸ்கெட்ச் டூ இமேஜ் (Sketch to Image), ஸ்டைல் சின்க் (Style Sync) போன்று கேமரா சர்ந்த அம்சங்கள் இந்த மாடலில் நிறைந்துள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி பாதுகாப்பு, IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனினை ரூ.28,999 முதல் வாங்கலாம். விற்பனை வருகிற டிசம்பர் 23ஆம் தேதி, பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் பேண்டோன் லில்லி பேட், பேண்டோன் கேஜெட் கிரே மற்றும் பேண்டோன் ப்ரோன்ஸ் கிரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
- இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- ஹானர் X70 மாடலில் இருந்ததைப் போல 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம்.
சீன சந்கையில் 10,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படும் புதிய ஸ்மார்ட்போனில் சுமார் 10,080mAh பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இது மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அளவில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் பவர் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இது ஹானர் பவர் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. முந்தைய ஹானர் பவர் ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது பிரிவில் முதல் முறையாகும். இதன் தொடர்ச்சியாக ஹானர் நிறுவனம் 8300mAh பேட்டரியுடன் கூடிய ஹானர் X70 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்த ஸ்மார்ட்போன் 6.79-இன்ச் 1.5K 120Hz AMOLED 120Hz டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஹானர் X70 மாடலில் இருந்ததைப் போல 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம்.
Saber என்ற குறியீட்டுப் பெயரில் உருவாகி வரும் புதிய ஸ்மார்ட்போன் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமராவுடன் வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னோ ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஹானர் பவர் 2 அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை 2199 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,360) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
- ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5110mAh பேட்டரியை வழங்கியுள்ளது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ரெட்மி நோட் 14 5ஜி விலை குறைக்கப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 15 சீரிசின் இந்திய வெளியீட்டுக்கு முன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 15 சீரிஸ் வருகிற ஜனவரி 6ஆம் தேதி அறிமுகமாகும் என்று சியோமி உறுதிப்படுத்தியது.
நாட்டில் தனது சந்தைப் பங்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் சியோமி நிறுவனத்திற்கு இது ஒரு முக்கியமான ஸ்மார்ட்போன் சீரிசாக இருக்கும்.
புதிய விலை விவரங்கள்:
ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2024ஆம் ஆண்டில் ரெட்மி நோட் 14 5ஜி சீரிசின் ஆரம்ப விலையாகும். தற்போது, இந்த விலை ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.16,499 ஆக மாறியுள்ளது.
இத்துடன் HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது, நீங்கள் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,499 ஆகக் குறையும். இவைதவிர மாத தவணை சலுகைகளும் உள்ளன. பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனினை சியோமி இந்தியா வலைத்தளத்தில் இருந்து நேரடியாக வாங்கலாம்.
அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த ஸ்மார்ட்போன் அதன் பிரிவில் அதிக பிரைட்னஸ் கொண்டிருந்தது. இத்துடன் சோனி நிறுவனத்தின் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருந்தது. இதில் 50MP சோனி பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, முன்புறத்தில் 20MP சென்சார் உள்ளது.
இந்த நிறுவனம் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5110mAh பேட்டரியை வழங்கியுள்ளது. பாதுகாப்பிற்காக, திரையின் மேல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7025 பிராசஸரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் கொண்டிருக்கிறது.






